அவரோட என்னை கம்பேர் பண்ணாதீங்க.. நான் ஒண்ணுமே இல்லை.. டிவிட்டரை கலங்க வைத்த மூத்த வீரர்.. உருக்கம்
சென்னை: இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் குறித்து தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் செய்த டிவிட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது வீரர்களை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக மீதம் உள்ள 3 போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேம் சேஞ்சர் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். முதல் இன்னிங்சில் இவர் 2 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார்

சிறப்பான பவுலிங்
இந்த போட்டியில் அவர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதிலும் இரண்டாவது இன்னிங்சில் இவர் பவுலிங்தான் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. இரண்டாவது இன்னிங்சில் ரஹானே, பண்ட், சுப்மான் கில் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டை இவர்தான் எடுத்தார். ஆண்டர்சனுக்கு தற்போது 39 வயதாகிறது. இவர் செய்த ரிவர்ஸ் ஸ்விங் மூலம்தான் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

ஸ்டெயின்
இன்னொரு பக்கம் ஆண்டர்சன் போலவே தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினும் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்ய கூடியவர். ஆசியாவில் ஆண்டர்சனுக்கு இணையான ரெக்கார்டை ஸ்டெயின் வைத்து இருக்கிறார். ஆசியாவில் ஆண்டர்சன் 71 விக்கெட்டுகளை எடுத்து சாதனை செய்து இருக்கிறார்.

சிறப்பு
இன்னொரு பக்கம் ஸ்டெயின் 92 ரன்களை எடுத்து சாதனை படைத்து உள்ளார். ஆசியாவில் அதிக விக்கெட்டுகளை எடுத்து வேகப்பந்து வீச்சாளர்களில் இவர்கள் முக்கிய வீரர்களாக உள்ளனர்.இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு டிவிட் ஒன்று செய்யப்பட்டு இருந்தது.

ஆசியா
அதில் இவர்கள் இருவரும் ஆசியாவில் நன்றாக பவுலிங் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. அதோடு இவர்களின் டேட்டாவும் அந்த டிவிட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தன்னையும், ஆண்டர்சனையும் ஒப்பிட வேண்டாம், ஆண்டர்சன் ஒரு லெஜண்ட் என்று ஸ்டெயின் பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.

லெஜண்ட்
அதில், ஜிம்மி இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் என் 20க்கு 20 சோபாவில் உட்கார்ந்து போட்டிகளை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஆண்டர்சன் ஒரு லெஜண்ட். அவருக்கு வயதாக, வயதாக நன்றாக ஆடுகிறார், என்று ஸ்டெயின் பாராட்டி உள்ளார்.

டிவிட் எப்படி
ஸ்டெயின் இப்படி டிவிட் செய்து இருப்பது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஸ்டெயின் உண்மையில் திறமையான வீரர். ஒரு காலத்தில் ஆக்ரோஷமாக இருந்தார். ஆனால் பாவம் இப்போது இவரை இப்படி பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

நன்றாக ஆடுவார்
நன்றாக ஆடிக்கொண்டு இருந்த வீரர் காயம் காரணமாக வாய்ப்புகளை இழந்தார். இப்போது இருந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். அவரின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது, என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications