Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஆபத்துக்கான அறிகுறி.. சாதாரணமாக நினைக்காதீங்க.... இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

சென்னை: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மீண்டுவந்துள்ளது குறித்து இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில் 2வது டெஸ்டில் பழிதீர்த்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி மீண்டுவந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு அடுத்த போட்டிகளில் ஆபத்து என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிலடி

பதிலடி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் டெஸ்டுக்கு பழி தீர்த்து வருகிறது. இதில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆடியுள்ள இந்திய அணி முறையே 329 மற்றும் 286 ரன்களை குவித்துள்ளது. 482 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து ஆடி வருகிறது.

எப்படி

எப்படி

சென்னை பிட்ச் மோசமாக உள்ளதாக இங்கிலாந்து வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியுள்ளது. குறிப்பாக அஸ்வின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்சில் சதமடித்தும் மிரட்டியுள்ளார். கேப்டன் கோலியும் அரை சதம் அடித்து அணிக்கு உதவினார்.

அவ்வளவுதான்

அவ்வளவுதான்

2வது டெஸ்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி 2வது டெஸ்டில் மீண்டு வருவதற்கு இனி வாய்ப்பு இல்லை. தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு முறை அவர்கள் மீண்டு வந்தால் பிறகு அவர்களை கட்டுப்படுத்துவது கடினம் என தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்திய அணி விமர்சனங்களால் மீண்டு வருகிறது என்பது என் நம்பிக்கை. இதற்கு உதாரணம் கடந்த ஆஸ்திரேலிய தொடர். அங்கு அவர்கள் முதல் போட்டியில் தோற்ற பிறகு மீண்டு வந்த விதம் இங்கிலாந்துக்கு அடுத்தப்போட்டிக்கான அபாய குறியீடு என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 11:13 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+