Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வெட்டோரி அச்சுறுத்துவார்: டோணி

மெல்போர்ன்: நியூசிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான இறுதி போட்டியில், டேனியல் வெட்டோரி முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்தார்.

மெல்போர்னில் உலக கோப்பை இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இதில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இந்நிலையில், இந்திய கேப்டன் டோணி கூறியுள்ளதாவது:

Daniel Vettori Key for New Zealand in World Cup Final vs Australia, Says MS Dhoni

இறுதி போட்டியில் வெட்டோரி பந்து வீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வெட்டோரி போன்ற வீரர் நடுவரிசையில், விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். மேலும், அவரது பந்தை எளிதில் அடித்து ரன் சேர்க்கவும் முடியாது.

எனவேதான், இறுதி போட்டியில் வெட்டோரி முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறுகிறேன். இவ்வாறு டோணி கூறியுள்ளார். 36 வயதான டேனியல் வெட்டோரி, இப்போது முன்பு போல முழு ஃபார்மில் இல்லை. ஆனால், அவர் முக்கிய நேரத்தில் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, March 28, 2015, 10:51 [IST]
Other articles published on Mar 28, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+