Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாணம் கட்டிக்க சொல்லி, விராட் கோஹ்லியை விடாது துரத்தும் வீராங்கனை

லண்டன்: விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொள்வதே லட்சியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார் இங்கிலாந்து பெண் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியலே யாட்.

வங்கதேசத்தில் இவ்வாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ செய்யும் வகையில் கோஹ்லி 44 பந்துகளில் 72 ரன்களை குவித்தார்.

Danielle meets Virat Kohli: Did he accept her marriage proposal?

இந்த போட்டியை டிவியில் பார்த்த இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியல்லே யாட், அன்றே தனது டிவிட்டர் பக்கத்தில், "கோஹ்லி என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்று டிவிட் செய்திருந்தார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட், தனது அணிக்காக 32 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 50 டிவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

எனவே, இதை ஏதோ ஜாலியாக செய்திருப்பார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தால், அம்மணி உண்மையிலேயே ஆழ் மனதில் அந்த எண்ணித்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாராம். தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, ஜூலை 1 முதல் 3ம்தேதிவரை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்துக்கே சென்ற டேனியலே, அங்கு கோஹ்லியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த படத்தை டிவிட்டரிலும் வெளியிட்டுள்ள வீராங்கனையின் சகோதரர் மேக்ஸ், "இவர்கள் ஒரு சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ஹா..ஹா.." என்று டிவிட் செய்துள்ளார்.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட். 22 வயதேயான கவர்ச்சி வீராங்கனையான இவர், இங்கிலாந்து அணிக்காக 32 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 50 டிவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Story first published: Saturday, July 5, 2014, 16:01 [IST]
Other articles published on Jul 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+