கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா??.. விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வழி.. பாக். சீனியர் அட்வைஸ்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அறிவுரை கூறியுள்ளார்.
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது.

விராட் கோலி ஃபார்ம்
இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் என பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் விராட் கோலியின் நிலைமை தான் கவலையளிக்கும் விதமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தே ஓய்வில் இருந்து வரும் கோலி, ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடியே தீர வேண்டும். இல்லையென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.

பாக். சீனியர் அட்வைஸ்
இந்நிலையில் கோலிக்கு பாகிஸ்தான் வீரர் தனிஷ் கனேரியா முக்கிய அட்வைஸ் கூறியுள்ளார். அதில், டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாட விரும்பினால் அவர் ஆசிய கோப்பையில் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும். இதற்காக அவர் தனது தற்போதைய பேட்டை பயன்படுத்தாமல் ஹூக் அல்லது க்ரூக் பேட்டினை பயன்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான் எண்ணம்
ஆசிய கோப்பையிலும் விராட் கோலி சொதப்புவார் என்று தான் பாகிஸ்தான் அணி நினைத்து வருகிறது. ஆனால் ஒருவேளை கோலி கம்பேக் தந்துவிட்டால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நான் அறிவேன். ஃபார்ம் அவுட் என்ற பெரிய அழுத்தத்தை கோலி தலையில் ஏற்றிக்கொள்ளாமல் விளையாட வேண்டும் என தனிஷ் கனேரியா பேசியுள்ளார்.

பெரும் சிக்கல்
ஓய்வில் இருந்து வந்த விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தீவிர பயிற்சியில் களமிறங்கினார். இந்த ஒருமாத கால ஓய்வு அவருக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுத்திருக்கும் என நம்பப்படுகிறது. ஒருவேளை கோலி ஆசிய கோப்பையில் சொதப்பினால், டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications