அஸ்வின் ஆஃப் ஸ்பின்னரே கிடையாதுங்க.. பரபரப்பு கருத்தை கூறிய பாக். முன்னாள் வீரர்.. காரணம் என்ன?
மும்பை: இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பந்துவீசவே தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதி வரை சென்று மோசமாக வெளியேறியது.
இந்தியாவின் தோல்விக்கூட சகஜம் தான் என்றாலும், 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது தான் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்பின்னர்கள்
இதனையடுத்து இந்திய அணியில் உள்ள பவுலர்கள் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த தொடரில் அஸ்வின் 6 போட்டிகளில் 6 விக்கெட்களையும், அக்ஷர் பட்டேல் 5 போட்டிகளில் 3 விக்கெட்களையுமே கைப்பற்றியிருந்தனர். ஆனால் யுவேந்திர சாஹல் கடைசி வரை பெஞ்ச்-லேயே அமரவைக்கப்பட்டிருந்தார்.

ஆஃப் ஸ்பின்னரே இல்லை
இந்நிலையில் அஸ்வினால் தான் இந்தியா தோற்றது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடியிருக்கவே கூடாது. ஆஸ்திரேலிய களத்தில் அவர் சிறப்பாக செயல்படவே முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருந்தக்கூடிய வீரரை டி20க்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

கோலிக்கே தெரியும்
அஸ்வின் குறித்து நன்கு புரிந்துவைத்திருந்த விராட் கோலி, தான் கேப்டனாக இருந்தபோது அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக மட்டுமே பயன்படுத்தினார். ஏனென்றால் ஆஃப் ஸ்பின்னர் எனக் கூறிக்கொள்ளும் அஸ்வினுக்கு ஆஃப் ஸ்பின்னே போடத்தெரியாது என தனிஷ் கூறியுள்ளார்.

அஸ்வின் ஓய்வா?
36 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் இனி டி20 கிரிகெட்டிற்கு ஒத்துவரமாட்டார் என்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. எனவே அவர் விரைவில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் கசிந்து வருகின்றன. இதே போல ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோரும் ஓய்வை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications