Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாலியல் வன்கொடுமை வழக்கு.. தனுஷ்கா குணதிலகாவுக்கு பெரும் அடி.. நீதிமன்றம், இலங்கை வாரியம் அதிரடி!!

இலங்கை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா மீது அந்நாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் அரையிறுதிக்கு தகுதிப்பெறாமல் சென்றது.

இந்த அணியின் தோல்வியுடன் சேர்த்து மற்றொரு கவலையையும் இலங்கை அணி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டது தான் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

இலங்கை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான தனுஷ்கா காயம் காரணமாக பாதியிலேயே டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் அவர் நாடு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்து வீரர்களுக்கு உற்சாகமளித்து வந்தார். இந்த சமயத்தில் தான் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

அந்நாட்டு பெண்ணும் - தனுஷ்காவும் ஆன்லைன் டேட்டிங் ஆஃப் மூலம் பழகியுள்ளனர். இருவரும் கடந்த நவம்பர் 2ம் தேதி சந்தித்துக்கொண்ட போது, அப்பெண்ணின் சம்மதம் இன்றியே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் புகார் கொடுக்க, ஆஸ்திரேலிய போலீஸார் தடாலடியாக அவரை கைது செய்தனர்.

நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவு

சிறையில் வைக்கப்பட்ட தனுஷ்கா குணதிலகா நீதிமன்றத்தில் பெயில் வேண்டி முறையிட்ட போதும், பாலியல் வழக்கு என்பதால் வெளியில் விட முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். மேலும் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இலங்கை வாரியம் அறிவிப்பு

இலங்கை வாரியம் அறிவிப்பு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது தனுஷ்கா குணதிலகாவை இடைகாலமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இனி வரும் எந்தவொரு சர்வதேச போட்டிகளுக்கும் அவரின் பெயர் அறிவிக்கப்படாது என்றும் அந்த வழக்கில் ஆஸ்திரேலிய வாரியத்திற்கு என்ன உதவி வேண்டுமோ, அதனை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

Story first published: Monday, November 7, 2022, 17:41 [IST]
Other articles published on Nov 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+