WATCH: அந்த ஒரு பால்..! பறந்து போன ஸ்டெம்ப்.. புரியாமல் முழித்த பிராவோ..! வைரல் வீடியோ..!
Recommended Video
ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் டேரன் பிராவோவை மாயாஜால பந்தில், பும்ரா போல்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தது. இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை இந்தியா எடுத்தது.

கோலி 51 ரன்களுடனும், ரகானே 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் கோலி வெளியேறினார். இதில் ரகானே 102 ரன்களும், விஹாரி 93 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ராவின் விக்கெட்டுகளில் அசத்தலானதாக கூறப்படுவது டேரன் பிராவோ விக்கெட் தான். அவரின் அந்த விக்கெட் வீடியோ தான் இப்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பந்து எப்படி உள்ளே வந்தது, ஸ்டெம்ப் எங்கே பறந்து போனது என்று தெரியாமல் பிராவோ ஒரு கணம் திகைத்து களத்தில் நிற்பார். வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களும் என்ன நடக்கிறது? எப்படி அவுட்டானார் என்பது தெரியாமல் ஆச்சர்யம் கலந்த திகைப்பில் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications