For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆக்ரோஷ இந்தியா வருது, அனல் பறக்கும் தொடருக்கு ரெடியாகுங்கள்: ஆஸி. கிரிக்கெட் கோச் அபய குரல்

By Veera Kumar

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் தெரிவித்துள்ளார்.

5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது மகேந்திரசிங் டோணி தலைமையிலான இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டி 12ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

Darren Lehmann predicts exciting series against 'aggressive' India

ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீமேன் நிருபர்களிடம் கூறியதாவது: டோணி அணி வலிமையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உலக கோப்பையின் அரையிறுதிவரை வந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அதுபோன்ற ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஆஸ்திரேலியாவும், சிறப்பான வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இவ்விரு அணிகள் நடுவேயான போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு லீமேன் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 8, 2016, 17:27 [IST]
Other articles published on Jan 8, 2016
English summary
Australia coach Darren Lehmann expects the upcoming limited-overs series against India to be an exciting one given the "aggressive" brand of cricket that Mahendra Singh Dhoni's men have been playing of late.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+