Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியும், கோஹ்லியும் இருவேறு துருவங்கள்.. ஆனால் இலக்கு ஒன்றே: டேரன் சம்மி

டெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவத்தின்போது அருகே இருந்து பார்த்ததாலோ என்னவோ, விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளுகிறார் வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டேரன் சம்மி.

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இரு போட்டிகளில் மட்டுமே சம்மி ஆடினாலும், பெங்களூரு அணியுடனே தொடர்ந்து பயணித்து வந்தார்.

அவர் அப்படி, இவர் இப்படி

அவர் அப்படி, இவர் இப்படி

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு டேரன் சம்மி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: விளையாட்டின் ஒவ்வொரு நொடியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆடுவது விராட் கோஹ்லி வழக்கமாக உள்ளது. டோணியை பொறுத்தளவில் அமைதியாகவே இருந்து இலக்கை எட்ட முயற்சி செய்கிறார்.

இரு துருவங்கள்

இரு துருவங்கள்

இருவருமே, கேப்டன்ஷிப்பில் வெவ்வேறு துருவங்கள். ஆனால், இருவரின் ஸ்டைலுமே இறுதியாக இந்தியாவுக்குதான் நன்மையை கொண்டு வருகிறது. விராட் கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னை உதாரணமாக கொண்டு அணியை வழிநடத்தும் திறமையுள்ளவர் கோஹ்லி.

ஆக்ரோஷம் தொடர வேண்டும்

ஆக்ரோஷம் தொடர வேண்டும்

ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற வெறி கோஹ்லிக்கு உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் காண்பித்த ஆக்ரோஷத்தை இந்திய அணிக்காகவும் கோஹ்லி காண்பித்தால் அவரது தலைமையில் இந்திய அணி முன்னேற்றம் காணும். வங்கதேசத்தில் சிறப்பாக ஆடி வெற்றி காண கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

கரீபியன் லீக்

கரீபியன் லீக்

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக என்னால் இரு போட்டிகளில்தான் ஆட முடிந்தது. ஆனால், இங்கிலாந்து கவுண்டி அணிக்காக ஆடி தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளேன். கரீபியன் டி20 தொடரில் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. செயின்ட் லூசியா ஜயுக்ஸ் அணிக்காக என்னுடன், கெவின் பீட்டர்சனும் ஆட உள்ளது அணிக்கு வலு சேர்க்கும் என்றார்.

Story first published: Friday, June 12, 2015, 10:15 [IST]
Other articles published on Jun 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+