Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் நன்றாக ஆடலாம்.. ஆனால் எங்களிடம்.. இலங்கை கேப்டனின் கணிப்பு..மறுப்பு தெரிவிக்கு வல்லுநர்கள்

கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான போட்டி எப்படி இருக்கும் என்பது குறித்து இலங்கை அணியின் புதிய கேப்டன் தசுன் ஷனகா பேசியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்த ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஜூலை 18ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இளம் படை

இளம் படை

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி இலங்கை தொடரில் மோதவுள்ளது. விஜய் ஹசாரே மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை இதற்காக பிசிசிஐ களமிறக்கியுள்ளது.

இரு அணிகளின் பலம்

இரு அணிகளின் பலம்

இந்நிலையில் இந்திய ஏ அணியை எதிர்கொள்வது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேசியுள்ளார். அவர், இந்த போட்டியில் எந்த அணியும் ஒன்றைவிட மற்றொருன்று பலமாக இருக்கும் என தெரிவிக்க முடியாது. இரு அணிகளும் சரிசமமாக தான் விளங்கும். இந்திய அணியில் பல புதுமுக வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஐபிஎல்-ல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடியது இல்லை.

குறைவான நேரம்

குறைவான நேரம்

இலங்கை அணி மிகவும் தாமதாக அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டது குறித்து பேசிய அவர், எவ்வளவு தாமதமாக அணியின் விவரங்களை வெளியிடுகிறோமோ, அந்த அளவிற்கு நன்மைதான். ஏனென்றால் எதிரணி தயாராவதற்கு குறைவான நேரமே கிடைக்கும். அதிலும் குறிப்பாக இந்திய அணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடாத காரணத்தினால் அவர்கள் சற்று நன்றாகவே தயாராக வேண்டும் என தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Srilanka அணியை Spin Attacksல் முடித்த India | Oneindia Tamil
 வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அணி சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஊதிய பிரச்னை காரணமாக 2 சீனியர் வீரர்கள் வெளியேறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் 3 சீனியர் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் இலங்கை வென்றால் கூட ஆச்சரியம் தான் என முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.

Story first published: Saturday, July 17, 2021, 21:33 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+