இலங்கை வீரர் செய்த மோசமான காரியம்.. அண்ணனுக்கு கொஞ்சம் "ஃபைனை" போடே!
நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருக்கு பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இலங்கை வீரர் 'தாஷன் ஷணன்கா' மிகச்சிறிய வித்தியாசத்தில் வாழ்நாள் தடை தண்டனையில் இருந்து தப்பித்து இருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பந்து வீசும் போது இலங்கை வீரர் 'தாஷன் ஷணன்கா' பந்தை சேதப்படுத்தி இருக்கிறார்.

தையைலைப் பிரித்தார்
பந்திற்கு நடுவில் தையல் போட்டு இருக்கும் பகுதிகளை இவர் நகத்தால் கீறியதாக கூறப்படுகிறது. பந்து நன்றாக ஸ்விங் ஆகுவதற்காக சில ஆஸ்திரேலிய பிளேயர்கள் இப்படிப்பட்ட செயலை செய்வது உண்டு.

அபராதம் போட்ட ஐசிசி
இந்த செயலுக்கு ஐசிசி தடைவிதித்து இருக்கிறது. இதன் காரணமாக தாஷன் ஷணன்காவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி சம்பளத்தில் இருந்து 75 சதவிகித சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

3வது முறையாக
தாஷன் ஷணன்கா ஏற்கனவே இரண்டு முறை ஐசிசி ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. இது அவரது மூன்றாவது குற்றமாகும். இன்னும் ஒரு சிறிய தவறு செய்தால் கூட ஐசிசி விதிகளின்படி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் சகஜம்
இதுபோல பந்தை சேதப்படுத்துவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி பந்து வீச்சாளர்கள் பலர் இதுபோல செய்து மாட்டியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications