Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

43 பந்தில் 12 சிக்ஸ், 8 ஃபோர்.. மரண அடி அடித்த இலங்கை கேப்டன்.. 121 ரன் குவித்து சிபிஎல் ரெக்கார்டு

செயின்ட் கிட்ஸ்: 2026 கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கேப்டனும், அதிரடி ஆல்-ரவுண்டருமாகிய தசுன் ஷனகா ருத்ரதாண்டவம் ஆடி, வெறும் 39 பந்துகளில் மின்னல் சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். செயின்ட் கிட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்து சதம் அடித்தார்.

செயின்ட் கிட்ஸ் அணி 9.2 ஓவரில் 89 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோது, ஜான்சன் சார்லஸ் ஆட்டமிழந்ததும் ஷனகா களமிறங்கினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் தன்னை முன்கூட்டியே களமிறக்கியதை சரியாக பயன்படுத்திய இவர், எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கினார். பந்தை எங்கு வீசுவது என்று தெரியாமல் எதிரணி பவுலர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்.

Dasun Shanaka Hits Fastest Century in CPL History off Just 39 Balls for St Kitts
Photo Credit:

களமிறங்கிய உடன் அதிரடியாக ஆடினாலும் தனது கடைசி 20 பந்துகளில் தான் உச்சம் தொட்டார். முதல் 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இருந்த அவர் அரைசதத்தை கடந்த பின் விஸ்வரூபம் எடுத்தார். தனது கடைசி 20 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சிபிஎல் வரலாற்றை மாற்றி எழுதினார்.

இதற்கு முன் ஆண்ட்ரே ரசல், டிம் செய்பெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் விளாசியதே சிபிஎல் தொடரில் அதிவேக சதம் என்ற சாதனையாக இருந்தது. அதை உடைத்தெறிந்த ஷனகா, தனி ஆளாக அதிவேக சதம் அடித்து சாதனை செய்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற இவர், வெறும் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 12 பிரம்மாண்ட சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 281.40 என்பதாக இருந்தது. அவரது அசுர ஆட்டத்தால் செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.

இந்த பாவமான பாகிஸ்தான் அணியிடம் தோற்றால் இங்கிலாந்துக்கு தான் அவமானம்.. ஸ்டூவர்ட் பிராட் நெத்தியடி

இந்த பாவமான பாகிஸ்தான் அணியிடம் தோற்றால் இங்கிலாந்துக்கு தான் அவமானம்.. ஸ்டூவர்ட் பிராட் நெத்தியடி

பின்னர் ஆடிய செயின்ட் லூசியா அணி 13.5 ஓவரில் வெறும் 98 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் இமாலய வெற்றியை பெற்றது. சாதனை சதம் அடித்த தசுன் ஷனகா ஆட்டநாயகன் விருது வென்றார்.

சிஎஸ்கே கேப்டன் யார்? ருதுராஜை விட சஞ்சு சாம்சன் செயல்பாடு சூப்பர்.. சடகோபன் ரமேஷ் யோசனை

Also Read

சிஎஸ்கே கேப்டன் யார்? ருதுராஜை விட சஞ்சு சாம்சன் செயல்பாடு சூப்பர்.. சடகோபன் ரமேஷ் யோசனை
Story first published: Friday, September 4, 2026, 11:32 [IST]
Other articles published on Sep 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+