பாண்ட்யா செய்த அதே யுக்தி.. இந்தியாவை வீழ்த்த கடைசி நேரத்தில் ஷனகா செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்!
புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யாவை போலவே தசுன் ஷனகா செய்த ஒரு விஷயத்தால் தான் இந்தியா கடைசி வரை சென்று தோற்றுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான களம் என தெரிந்தும் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்து தொடக்கமே அதிர்ச்சி தந்தார்.

2வது டி20 போட்டி
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி ஓப்பனிங் வீரர்கள் அட்டகாசமான அடிதளத்தை அமைத்தனர். பதும் நிஷங்கா 33 ரன்களும், குசல் மெண்டீஸ் 52 ரன்களும் விளாச மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல ஏமாற்றினர். இறுதியில் கேப்டன் தசுன் ஷனகா 22 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.

இந்தியாவின் இன்னிங்ஸ்
இதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் முற்றிலுமாக சரிந்தது. 57/5 ரன்கள் என மிக மோசமாக இருந்த அணியை சூர்யகுமார் யாதவ் - அக்ஷர் பட்டேல் ஜோடி மீட்டது. சூர்யகுமார் 51 ரன்களும், அக்ஷர் பட்டேல் 65 ரன்களையும் விளாச இந்தியா வெற்றிக்கு அருகில் சென்றது. எனினும் கடைசி ஓவரில் 21 ரன்கள் தான் தேவை என வந்த போது தோற்றது.

கடைசி ஓவர் மாற்றம்
இந்நிலையில் வெல்ல வேண்டிய போட்டியை இந்தியா தோற்பதற்கு கடைசி ஓவரில் இலங்கை கேப்டன் வைத்த ட்விஸ்ட் தான் காரணம். வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் ஓவர்களும் முன்கூட்டியே வீசப்பட்டுவிட்டன. இதனால் கடைசி ஓவரை வீச சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா மட்டுமே இருந்தார். அவரோ 3 ஓவர்கள் வீசி 41 ரன்களை வாரி வழங்கியிருந்தார். எனவே அவரின் பவுலிங்கில் 21 ரன்கள் சுலபமாக அடித்துவிடலாம் என அனைவரும் நினைத்தனர்.

கேப்டன் தந்த ட்விஸ்ட்
ஆனால் கேப்டன் ஷனகா, நானே பந்துவீசுகிறேன் எனக்கூறி ட்விஸ்ட் கொடுத்தார். அக்ஷர்பட்டேல் மற்றும் ஷிவம் மாவி அதிரடி ஃபார்முடன் களத்தில் இருந்தனர். ஒருவேளை ஹசரங்கா வந்திருந்தால், சுழற்பந்துவீச்சு குறித்து நன்கு அறிந்த அக்ஷர் ரன் குவித்திருப்பார். ஆனால் வேகப்பந்துவீச்சில் 4 ரன்களே அடிக்க முடிந்தது. முதல் டி20ல் வேகப்பந்துவீச்சுக்கு பதிலாக அக்ஷரை கொண்டு வந்து ஹர்திக் வியப்பளித்தார். இதே போல தற்போது ஸ்பின்னருக்கு பதிலாக களமிறங்கி ட்விஸ்ட் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications
