அழகே அழகே .. நீ பேரழகே.. இவர் யாரென்று தெரிகிறதா.. விக்கு.. மேக்கப்பு.. கலக்கறீங்களே!
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். பார்த்ததுமே பகீரென சிரிப்பு வந்து விடும். அப்படி ஒரு வீடியோ.
Recommended Video
சக்லைன் முஷ்டாக் அந்தக் காலத்தில் அருமையான சுழற்பந்து வீச்சாளர். இவர் இப்போது வீட்டோடு முடங்கியிருக்கிறார் எல்லோரையும் போல. வழக்கம் போல இவரும் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் அவரது தோற்றம் தான் சிரிக்க வைத்து விடுகிறது.
வீடியோவில் புத்தம் புதிய தோற்றப் பொலிவுடன் பார்க்கவே படு கவர்ச்சியாக காணப்புகிறார் சக்லைன் முஷ்டாக்.. எல்லாத்துக்கும் காரணம் அவரோட செல்ல இளவரசி.. ஆமாங்க அவரோட பொண்ணுதான் இந்த வேலை பார்த்து வச்சிருக்கு.

தலையில் பிங்க் விக்
சக்லைடன் முஷ்டாக்கின் தலையில் புது விக்கை மாட்டி விட்டுள்ளார் அவரது மகள். பிங்க் கலரில் அந்த விக் இருக்கிறது. புருவத்தில் ஐலேஷ் போட்டு விட்டுள்ளார். முகத்திலும் நிறைய மேக்கப் தாண்டவமாடுகிறது. உதட்டில் லிப்ஸ்டிக் வேறு. பார்க்கவே வாவ் என்று சொல்லும் வகையில் தோற்றமே மாறிக் காணப்படுகிறார் சக்லைன் முஷ்டாக்.
மகள் பெருமை
அந்த வீடியோவில், எனக்கு புதிதாக இவர் மேக்கப் போட்டு விட்டுள்ளார். விக் மாட்டி விட்டுள்ளார். இதுதான் எனது புதிய ஹேர்ஸ்டைல். நல்லாருக்கா.. (மகளைப் பார்த்து) உங்களுக்குப் பிடிச்சிருக்கா .. ஹேப்பியா என்று கேட்கிறார் சக்லைன். மகளும் தலையை ஆட்டியபடி மெளனமாக மகிழ்ச்சி என்கிறார். நீங்களும் உங்க குடும்பத்தோடு இப்படி சந்தோஷமா இருங்க. வெளியில் போகாதீங்க என்று கூடவே மெசேஜும் கொடுத்துள்ளார் சக்லைன் முஷ்டாக்.
2015க்குப் பிறகு மீண்டும்
இப்படி சக்லைனை மேக்கப்பில் போட்டு முக்கி எடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2015ம் ஆண்டும் கூட இதேபோல அவரது மகள் தனது அப்பாவுக்கு மேக்கப் போட்டு அசத்தியிருந்தார். அப்போது அந்த படத்தையும் அவர் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அதே பாணி மேக்கப்தான் இப்போதும் போட்டுள்ளார். ஆனால் இந்த முறை எக்ஸ்ட்ராவாக தலைக்கு விக் மாட்டி விட்டுள்ளார். பார்க்க சூப்பராக இருக்கிறார் சக்லைன்.
பாராட்டு குவிகிறது
இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு குவிந்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் பலரும் வந்து சூப்பரா இருக்கு. கவர்ச்சியா இருக்கீங்க என்று சக்லைனை கலாய்த்தும், பாராட்டியும், அவரது மகளை வாழ்த்தியும் கருத்துக்களைக் குவித்து வருகின்றனர். சக்லைன் இதை ஜாலிக்காக மட்டும் போடவில்லை. குடும்பத்தோடு எல்லோரும் ஹேப்பியா இருங்க.. தனித்திருங்க. கொரோனாவை வெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இதைப் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications