Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்கி இருக்கலாமே.. விலை போகாத இந்திய வீரருக்கு டேவிட் ஹஸ்ஸி ஆதரவு

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2019 வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் மனோஜ் திவாரி எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சியில் இருந்த மனோஜ் திவாரி, தன் மனக்குறையை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார்.

இன்றும் வருத்தத்தில் இருந்து மீளாத மனோஜ் திவாரி ட்விட்டரில் மீண்டும் புலம்பி இருந்தார். இந்த முறை தன் மோசமான அனுபவங்களை பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றும் கூறி இருந்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹஸ்ஸி மனோஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மனோஜ் திவாரி வருத்த ட்வீட்

மனோஜ் திவாரி வருத்த ட்வீட்

மனோஜ் திவாரி ஐபிஎல் அணிகள் தன்னை ஏலத்தில் எடுக்காமல் போனது மற்றும் சதம் அடித்த பின்னரும் 14 போட்டிகளில் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது போன்றவற்றை குறிப்பிட்டு ட்விட்டரில் முதல் நாள் பதிவிட்டார். அதற்கு பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கூறி பதில் அளித்து இருந்தனர்.

ரசிகர் பதில்

மனோஜ் திவாரி மீண்டும் ட்விட்டரில் தன் குறைகளை கூற இப்போதும் பல கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அதில் ஒருவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹஸ்ஸி கமண்டரி செய்யத் துவங்கிய பின்னர் மீண்டும் சென்னை அணிக்கு ஆடினார். அது போல உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

டேவிட் ஹஸ்ஸி ஆதரவு

இந்த பதிவை கண்ட டேவிட் ஹஸ்ஸி, இதை ஆமோதித்து மனோஜ் திவாரிக்கு ஆதரவாக பதிவிட்டார். அதில், "நீங்கள் சொல்வது சரிதான். மனோஜ் திவாரி ஒரு அணியிலாவது இந்த முறை இடம் பெற்றிருக்க வேண்டும். அவர் எந்த அணிக்காக ஆடக் கூடிய வீரர்" என குறிப்பிட்டு இருந்தார்.

ஹஸ்ஸியின் ஆதரவுக்கு நன்றி

ஹஸ்ஸியின் ஆதரவுக்கு நன்றி

டேவிட் ஹஸ்ஸியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மனோஜ். தன் இரண்டாம் பதிவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் யாருக்கும் ஏற்பட்டு இருக்காது. அதை பற்றி விரைவில் கூறுவேன் என கூறி இருந்தார். ஆனால், அதை பற்றி ஒருவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

Story first published: Thursday, December 20, 2018, 16:01 [IST]
Other articles published on Dec 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+