Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பந்துகளால் தலைக்கீழாக மாறிய ஆட்டம்.. அஸ்வினின் பந்துவீச்சால் தோற்ற இந்தியா ?சாஹலுக்கு இனி வாய்ப்பு

பெர்த் : டி20 உலககோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

134 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தும், தென்னாப்பிரிக்க அணி , 2 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச தென்னாப்பிரிக்க அணி முதல் 10 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2 சிக்சர்

2 சிக்சர்

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அஸ்வின் வீசிய 18 வது ஓவரில் முதல் 2 பந்தில் 2 சிக்சர்கள் போக, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 16 பந்தில் 13 ரன்கள் என மாறியது. அது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியது. எனினும் அந்த ஓவரில் ஸ்டப்ஸ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினாலும், தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இந்தியாவுக்கு டேமேஜ் செய்துவிட்டது.

மாறி இருக்கும்

மாறி இருக்கும்

இதனால் 12 பந்துக்கு 12 ரன்கள் என தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் 18வது ஓவரில் 2 சிக்சர் கொடுத்தாலும், அடுத்த 4 பந்தில் 1 ரன் மட்டும் 1 விக்கெட்டை மட்டுமே கொடுத்தார். இதில், அஸ்வின் சிக்சர் அடிக்காமல் விட்டு இருந்தால் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 அல்லது 13 ரன்கள் தேவைப்பட்டு இருக்கும்.

பெரிய தவறு

பெரிய தவறு

பெரிய மைதானம் என்பதால், Flight delivery ஐ வீசினால், அதை தூக்கி அடித்துவிட்டு பேட்ஸ்மேன் கேட்ச்சாகி விடுவார் என்று அவர் போட்ட கணக்கு தவறாகிவிட்டது. அஸ்வின் 4 ஓவரில் 43 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு முன்பு 12வது ஓவரில் அஸ்வின் வீசிய போது ஏய்டன் மார்க்ரம் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச்சை பிடிக்க தவறவிட்டார்.

அஸ்வின் மீது தவறு?

அஸ்வின் மீது தவறு?

இதனால் அஸ்வினை குறை சொல்வது என்பது சரியாக இருக்காது. மேலும் பெர்த் போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அஸ்வினின் இந்த செயல்பாடே, மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அதனை காரணமாக காட்டி அஸ்வினை நீக்கி, சாஹலை அணியில் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. அதனை மறுப்பதற்கு இல்லை.

Story first published: Monday, October 31, 2022, 14:08 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+