Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPLஇல் வெளியே உட்கார வைச்சாங்க.. இப்போ அசுர ஃபார்மில் வார்னர்.. 30 ரன்கள் எடுத்தால் சூப்பர் சாதனை

துபாய்: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வெறும் 30 ரன்களை மட்டும் எடுத்தால் சூப்பர் சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொள்கின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஐசிசி தொடர் என்றாலே ஆஸ்திரேலியா தான். கடந்த காலங்களில் ஐசிசி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாகவே ஆஸ்திரேலியா இருந்துள்ளது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் சுமாரான ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது சூப்பர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இந்த உலகக் கோப்பையில் வார்னர் ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்குப் பெரிய நிம்மதி தான். கடந்த ஒரு ஆண்டாகவே தடுமாறி வந்த வார்னர், இப்போது தான் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். அவரைத் தவிர வேறு யாரும் ஆஸ்திரேலியா அணியில் சொல்லிக்கொள்ளும்படி பேட்டிங் செய்யவில்லை. வார்னர் 6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 236 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்து எந்த வீரரும் 150 ரன்களை கூட தாண்டவில்லை.

30 ரன்கள்

30 ரன்கள்

இந்நிலையில், இன்றைய போட்டியில் வார்னர் வெறும் 30 ரன்களை குவித்தால் சூப்பர் சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார். இதுவரை இந்த டி20 உலகக் கோப்பையில் 236 ரன்களை எடுத்துள்ள வார்னர், இன்று 30 ரன்கள் எடுத்தால் ஒரே டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்கு முன்னதாக கடந்த 2007 உலகக் கோப்பையில் மேத்யூ ஹேடன் 265 ரன்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அடுத்ததாக வாட்சன் 2012இல் 249 ரன்களை எடுத்திருந்தார்.

நியூசிலாந்து திட்டம்

நியூசிலாந்து திட்டம்

வார்னர் தான் தங்களுக்கு முதல் அச்சுறுத்தல் என்பது நியூசிலாந்து அணிக்குத் தெளிவாகத் தெரியும். வார்னரை விரைவில் வெளியேற்றிவிட்டால் ஆஸ்திரேலியாவை எளிதாகக் கட்டுப்படுத்திவிடலாம். இதனால் வார்னருக்கு என நிச்சயம் தனித் திட்டம் வைத்திருப்பார் கேன் வில்லியம்சன். அதேநேரம் ஆஸ்திரேலியா அணியில் வார்னரை தாண்டி மற்ற பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். இல்லையென்றால் டி20 உலகக் கோப்பை இந்த முறையும் கனவாகவே போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.

முதல் டி20 உலகக் கோப்பை

முதல் டி20 உலகக் கோப்பை

நியூசிலாந்து அணி தற்போது இருக்கும் ஃபார்முக்கு அவர்களுக்கே கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் ஐசிசி தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலியாவுக்கு புது தேம்பு வந்துவிடும். அதுவும் இறுதிப் போட்டி என்றால் தனியாகச் சொல்லவா வேண்டும். இரு அணிகளும் தங்கள் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குவதால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். இங்கு கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் 9இல் சேஸ் செய்யும் அணியே வென்றுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 9 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

Story first published: Sunday, November 14, 2021, 16:43 [IST]
Other articles published on Nov 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+