For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்காலா... முக்காபுலா... என்னாது பிரபு தேவா பாட்டுக்கு டேவிட் வார்னர் டான்சா... நல்லாதான்யா இருக்கு

மெல்போர்ன் : மொழிபேதம் அற்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் பாடல்களுக்கு சிறப்பான மூவ்மென்ட்களை கொடுத்து ஆடி டிக் டாக் வீடியோக்களை செய்து ரசிகர்களை அசத்தி வருகிறர் டேவிட் வார்னர்.

Recommended Video

David Warner new TikTok video| பிரபுதேவா பாடலுக்கு டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர்

கொரோனாவால் வீட்டில் முடங்கினாலும், இவரது அலப்பறைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. இவருடன் இவரது மனைவி, மகள்களும் இணைந்து கொள்வதுதான் இதில் ஸ்பெஷலே.

தற்போது, பிரபுதேவாவின் பிரபலமான முக்காலா, முக்காபுலா பாடலுக்கு தன்னுடைய மனைவி கேண்டிசுடன் இணைந்து ஆட்டம் போட்டு டிக் டாக் வீடியோவாக வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னர். இதில் ஹைலைட் என்னவென்றால், அவரது செல்ல மகளும் இதில் அவர்களுக்கு தெரியாமல் ஆட்டம் போட்டுள்ளார்.

டேவிட் வார்னரின் அலப்பறைகள்

டேவிட் வார்னரின் அலப்பறைகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரருமான டேவிட் வார்னர், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டில் முடங்கினாலும் மிகவும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் செய்லபட்டு வருகிறார் வார்னர். ஓய்வு கிடைத்தாலும் கிடைத்தது, இவரது அலப்பறைகளை கட்டுப்படுத்த முடியாமல் ரசிகர்கள் அல்லோல கல்லோலப்பட்டு வருகின்றனர்.

மனைவியுடன் வார்னர் ஆட்டம்

மனைவியுடன் வார்னர் ஆட்டம்

தொடர்ந்து பல்வேறு டிக்டாக் வீடியோக்களை குறிப்பாக தமிழ்நாட்டு பிரபல பாடலான 'ஒட்டகத்தை கட்டிக்கோ' உள்ளிட்ட பல்வேறு பாடல்களை டிக் டாக் வீடியோவாக பதிவிட்டு வரும் வார்னர், தற்போது கையிலெடுத்திருப்பது, பிரபுதேவா ஆட்டத்தில் பிரபலமான முக்காலா, முக்காபுலா பாடலைத்தான். இந்த பாடலுக்கு தன்னுடைய மனைவி கேன்டிசுடன் ஆட்டம் போட்டுள்ளார் வார்னர்.

ஷில்பாவா... நாங்களா?

ஷில்பாவா... நாங்களா?

இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள், டான்ஸ் மூவ்மெண்ட்களை சிறப்பாக கையாண்டு ஆட்டம் போட, அவர்களுக்கு பின்னால் இருந்து அவர்களது குட்டி தேவதையும் அவர்களுக்கு தெரியாமல் ஆடி அவர்களை சர்ப்ரைஸ் செய்ததுதான். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை டேக் செய்து யார் சிறப்பாக ஆடியுள்ளனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் சிறப்பு?

யார் சிறப்பு?

ஏன் இவர் ஷில்பா ஷெட்டியை டேக் செய்துள்ளார் என்ற சந்தேகம் வருவது இயல்புதான். இந்த ஆண்டின் துவக்கத்தில் , இந்த பாடலுக்கு தனியாக ஆட்டம் போட்டு ஷில்பா ஷெட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரபுதேவா முன்னால் செல்வது போல வரும். அப்புறம் என்ன ஷில்பா ஷெட்டியா, டேவிட் வார்னா அல்லது கேன்டிஸ் வார்னா ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Story first published: Sunday, May 17, 2020, 19:25 [IST]
Other articles published on May 17, 2020
English summary
David Warner shared a TikTok video showcasing his dance skills
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+