மன்னிச்சுக்கங்க சிராஜ்... இனவெறி தாக்குதலை ஏத்துக்கவே முடியாது.. டேவிட் வார்னர் வருத்தம்
சிட்னி : இந்திய பௌலர் முகமது சிராஜிற்கு எதிராக கடந்த போட்டியில் இனவெறி தாக்குதலில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடந்த செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற கடந்த போட்டியின்போது முகமது சிராஜ் மீது இனவாத ரீதியில் சில ரசிகர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். சர்வதேச அளவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் எப்போதும் இத்தகைய அனுபவங்கள் தொடர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் ரசிகர்களின் இந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட முறையில் சிராஜ் மற்றும் இந்திய அணியிடம் அவர் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இத்தகைய செயலை பொறுத்துக் கொள்ள முடியாது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications