Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமரேந்திர பாகுபலியாகிய நான்.. டிக்டாக்கை மிரள வைத்த வார்னர்.. வைரல் வீடியோ.. 1.2 கோடி வியூஸ்

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக்கில் மீண்டும் ஒரு தெலுங்கு சினிமா வீடியோவை போட்டு செம வைரலாகி இருக்கிறார்.

Recommended Video

Warner Bahubali Tiktok video is going viral.

முன்பு புட்ட பொம்மா, தெலுங்கு போக்கிரி பட வசனம், இஞ்சி இடுப்பழகா பாடல் என பல தெலுங்கு, தமிழ் சினிமா தொடர்பான வீடியோக்கள் போட்டு வைரல் ஆகி இருந்தார் வார்னர்.

இந்த முறை பாகுபலி திரைப்படத்தில் வரும் பிரபல வசனம் ஒன்றை பேசி டிக்டாக்கை அதிர வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கிறார்கள்?

கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கிறார்கள்?

இந்த கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது, எந்த சமூக வலைதளத்துக்கு போனாலும் கிரிக்கெட் வீரர்கள் முகத்தை பார்க்க வேண்டியதாக உள்ளது. ட்விட்டர், பேஸ்புக் எல்லாம் அவுட் ஆஃப் பேஷன் ஆகி விட்டதால், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற வீடியோ சார்ந்த சமூக வலைதளத்தில் எல்லோரும் குடியேறி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் குத்தகை

இன்ஸ்டாகிராம் குத்தகை

இன்ஸ்டாகிராமை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல ஒவ்வொரு நாளும் நான்கு, ஐந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பேட்டிகள் அங்கே ஓடுகிறது. இந்த ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு வேற வேலையே இல்லையா என தோன்றும் அளவுக்கு பேட்டி எடுத்து, கொடுத்து நமை சோர்ந்து பக வைத்து விட்டனர்.

பீதி கிளப்பும் சாஹல்

பீதி கிளப்பும் சாஹல்

டிக்டாக்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் அதிகம் வாசம் செய்கிறார். அவர் யுஸ்வேந்திர சாஹல். அவர் வீடியோவை பார்த்தால், யப்பா சாமி ஆளை விடு என தலைதெறிக்க ஓட வேண்டியது வரும். ஆனால், டிக்டாக்கையே அதிர வைத்து வருகிறார் வார்னர்.

டிக்டாக் சூப்பர்ஸ்டார் வார்னர்

டிக்டாக் சூப்பர்ஸ்டார் வார்னர்

இத்தனைக்கும் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில் வீட்டில் தன் குழந்தைகள் கேட்டுக் கொண்டதற்காக தான் டிக்டாக் பயன்படுத்த துவங்கினார். சில நாட்களிலேயே ஒவ்வொரு வீடியோவும் கோடிக்கணக்கான வியூஸ்-ஐ எட்டி மிரள வைத்தது.

புட்ட பொம்மா பாடல்

புட்ட பொம்மா பாடல்

கடந்த சில நாட்கள் முன்பு தெலுங்கில் தற்போது மிக பிரபலமாக இருக்கும் "புட்ட பொம்மா" என்ற பாடலுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து பத்தே பத்து வினாடிகளுக்கு நடனமாடினார். அந்த வீடியோ 5 கோடி பார்வைகளை தாண்டி சென்று கொண்டுள்ளது.

இப்போது பாகுபலி

இப்போது பாகுபலி

அதன் பின் இஞ்சி இடுப்பழகா, போக்கிரி வசனம் என களை கட்டியது வார்னர் ஆட்டம். இப்போது பாகுபலி வசனத்தை கையில் எடுத்துள்ளார் வார்னர். பாகுபலி திரைப்படத்தில், அரசராக பதவி ஏற்கும் போது அவர் பேசும் மாஸ் வசனத்தை பேசிக் காட்டி உள்ளார் வார்னர்.

பாகுபலி வசனம்

பாகுபலி வசனம்

இந்த வீடியோவில் போர் வீரன் போன்ற உடையுடன் தோன்றும் வார்னர், "அமரேந்திர பாகுபலியாகிய நான்.. " என பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. மக்கள் கூட்டத்துக்கு அவரது மகளை ஐந்து பேராக மாற்றி காட்டி உள்ளார். இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

12.4 கோடி பார்வைகள்

12.4 கோடி பார்வைகள்

ஒரு நாளைக்குள் சுமார் 12.4 கோடி பார்வைகளை பெற்றுள்ளது இந்த பாகுபலி வீடியோ. இதே வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து அங்கேயும் லைக்ஸ் அள்ளி உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரது வீடியோவை பகிர்ந்துள்ளது.

Story first published: Sunday, May 17, 2020, 17:18 [IST]
Other articles published on May 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+