இந்தூர் : இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு அஸ்வின் ஏன் உலகக் கோப்பை அணியில் Wild card ரவுண்டில் வந்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியில் அனைத்து வகையான பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் வலது கை ஸ்பின்னர் மட்டும் அணியில் இல்லை. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இதனால் அஸ்வினை கடைசி கட்டத்தில் அணிக்குள் ரோகித் சர்மா கொண்டு வந்துள்ளார். மேலும் இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டை அஸ்வின் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மன் ஆன வார்னர், அஸ்வினிடம் பலமுறை ஆட்டம் இழந்திருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் நேற்று ஆட்டத்தில் பந்து வீச வந்த உடனே வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக மாறி பவுண்டரி அடித்தார்.
மீண்டும் இதே போல் அஸ்வின் பந்தை எதிர்கொண்ட போது இடது கையில் இருந்து வலது கை பேட்ஸ்மேனாக மாறி நின்று பவுண்டரி அடித்தார். இதன்மூலம் நான் இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் தானே நீ என்னுடைய விக்கெட்டை எடுப்பாய் நான் வலது கை பேட்ஸ்மனாக மாறி நின்று அடிக்கிறேன். இப்போது என்ன செய்வாய்? என்பது போல் இருந்தது வாரினரின் இந்த முயற்சி.
ஆனால் அஸ்வினோ நான் விரித்த வலையில் வாண்டட் ஆக வந்து நீதான் சிக்கிவிட்டாய் என்ற பாணியில் தொடர்ந்து தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்த நிலையில் மீண்டும் வலது கை பேட்ஸ்மேனாக மாறி வார்னர் ஸ்வீப் ஷார்ட் ஆடும் போது பந்தை தவறவிட்டார். அது நேரடியாக வார்னரின் காலில் பட்டது. இதற்கு நடுவர் அவுட் வழங்கி விட்டார்.
இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அஸ்வினை பார்த்து பயந்து தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை வார்னர் மாற்றியதே அஸ்வினுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆனது. வார்னர் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேன் ஆகவே விளையாடியிருந்தால் கூட அஸ்வினுடைய பந்துவீச்சில் தப்பித்து இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.