Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புட்ட பொம்மா புட்ட பொம்மா! மனைவியுடன் குத்தாட்டம்.. தீயாய் பரவும் வார்னர் வீடியோ.. 2 கோடி வியூஸ்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் டிக்டாக் சமூக வலைதளத்தில் இணைந்தார்.

Recommended Video

David Warner dance for Butta Bomma song in Tik Tok

அதைத் தொடர்ந்து வீடியோக்கள் போட்டு பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட பாடலுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து நடனமாடி தெறிக்க விட்டுள்ளார்.

ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அந்த அணியின் ரசிகர்களை கவர அவர் இந்த டிக்டாக் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் உலகம் முழுவதும் முடங்கி உள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் கடந்த மார்ச் 13க்கு பின் எங்குமே நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் இல்லை

ஐபிஎல் இல்லை

2020 ஐபிஎல் தொடரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, முதலில் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், பின்னர் அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலியில் வார்னர்

டிக்டாக் செயலியில் வார்னர்

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் ரொம்பவே பிஸியாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் திடீரென தன் ஐந்து வயது மகளின் ஆசைக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த ஆரம்பித்தார்.

வார்னர் கொண்டாட்டம்

வார்னர் கொண்டாட்டம்

டிக்டாக்கில் துவக்கத்தில் எப்படி வீடியோ எடுப்பது, என்ன மாதிரி வீடியோ போடுவது என தெரியாமல் திணறிய வார்னர், சில நாட்களில் தேறி விட்டார். இந்தியர்கள் தான் தன்னை அதிகம் பின் தொடர்கிறார்கள் என்பதை அறிந்த அவர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடுவது, தன் குழந்தைக்கு இந்திய உடை அணிவித்து ஆடுவது என கொண்டாட்டமாக இருந்தார்.

13 லட்சம் ரசிகர்கள்

13 லட்சம் ரசிகர்கள்

அவர் டிக்டாக் பயன்படுத்தத் துவங்கிய சில நாட்களில் சுமார் 13 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது பத்து லட்சம் பார்வைகள் பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிட்ட புட்ட பொம்மா பாடல் வீடியோ மட்டும் 2 கோடி பார்வைகளை தாண்டி உள்ளது.

புட்ட பொம்மா பாடல்

புட்ட பொம்மா பாடல்

தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த திரைப்பட பாடல் தான் "புட்ட பொம்மா, புட்ட பொம்மா". இந்த பாடல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. யூட்யூபில் பல கோடி பார்வைகளை பெற்று இருந்தது.

மனைவியுடன் ஆட்டம்

மனைவியுடன் ஆட்டம்

அந்த பாடலுக்கு டேவிட் வார்னர் தன் மனைவியுடன் சேர்ந்து நடனமாடினார். வெறும் 12 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் அந்த பாடலில் அல்லு அர்ஜுன் ஆடுவது போலவே ஆடி உள்ளார் வார்னர். அவரது மனைவியும் பாடலில் வரும் நடனத்துக்கு சரியாக நடனம் ஆடி உள்ளார்.

செம வைரல் ஆனது

செம வைரல் ஆனது

இதில் ஹைலைட்டாக அமைந்தது கடைசியில் வார்னர் மகள் பின்னணியில் நடனம் ஆடிக் கொண்டே செல்வது தான். இந்த வீடியோ இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வைரலாக பரவி வருகிறது. அதற்குள் 2 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

Story first published: Thursday, April 30, 2020, 18:30 [IST]
Other articles published on Apr 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+