புஷ்பா ஸ்டைலில் சதத்தை கொண்டாடிய வார்னர்.. பாகிஸ்தான் செய்த மெகா சொதப்பல்கள்.. இதை கவனிச்சீங்களா?
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அபாரமாக சதம் விளாசினார். இந்தத் தொடரில் பட்டையை கிளப்ப வேண்டும் என்ற வெறியுடன் டேவிட் வார்னர் களமிறங்கினார்.
வார்னர் இந்த தொடரில் அதிரடியாக விளையாடினாலும், அவரால் மூன்று இலக்க எண்ணை தொட முடியவில்லை. இந்த நிலையில் எங்கே அந்த ஆட்டோக்கார தம்பி என்று வடிவேலு சொல்வது போல் ஆஸ்திரேலியாவிடம் வசமாக வந்து பாகிஸ்தான் சிக்கியது.

உலகின் அதிபயங்கர வேகப்பந்து வீச்சு உடைய அணி என்று பாகிஸ்தான் முத்திரை குத்தப்பட்டாலும், அதனை எல்லாம் சுக்குநூறாக உடைத்தால் டேவிட் வார்னர் 39 பந்துகளில் அரைசதம் கடக்க சதத்தையும், 85 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். அப்போது தனது சதத்தை கொண்டாடும் வகையில் டேவிட் வார்னர் புஷ்பாவில் அல்லு அர்ஜுன் செய்யும் ஸ்டைலை டேவிட் வார்னர் ரசிகர்களுக்கு செய்து காட்டினார்.
அத்துடன் வார்னர் நிறுத்தவில்லை தொடர்ந்து அதிரடி காட்டினார். ஏற்கனவே 10 ரன்களில் வார்னர் இருக்கும்போது ஒரு கேட்சை பாகிஸ்தான் தவறவிட்டது. அதன் பிறகு வார்னர் சதம் அடித்தவுடன் ஒரு கேட்ச் வாய்ப்பை அப்துல்லா ஷபிக் தவற விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட வார்னர் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தனர்.ஆனால் 124 பந்துகளில் 163 ரன்கள் விளாசினார்.
இதில் 14 பவுண்டர்களும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பில்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது. பில்டிங்கில் அவர்கள் கேட்சை சரியாக பிடித்து இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா அணி 250 ரன்களில் சுருட்டி இருக்கலாம். ஆனால் பில்டிங் தவறாலேயே பாகிஸ்தான் அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications