50-50..விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதித்த டேவிட் வார்னர்
துபாய் : ஐபிஎல் தொடரில் இதுவரை 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து டேவிட் வார்னர் சாதனை புரிந்துள்ளார்.
கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை புரிந்துள்ள முதல் வீரர் டேவிட் வார்னர். இவரை தொடர்ந்து 42 அரைசதங்களை அடித்து விராட் கோலி இரண்டாது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடர் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும்நிலையில், இந்த தொடரில் 50 அரைசதங்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் டேவிட் வார்னர். கடத்ந கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவரை தொடர்ந்து ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலி 42 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய போட்டிகளில் மட்டுமே 9 அரைசதங்களை வார்னர் எடுத்துள்ளார். இந்த சீசனில் மட்டுமே அந்த அணிக்கு எதிராக 2வது அரைசதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications