For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.. ஐபிஎல் பார்க்க ரசிகனாக வருவேன்.. கலங்கும் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்தியாவிற்கு ஐபிஎல் போட்டிகளை காண வர இருக்கிறார்.

By Shyamsundar

Recommended Video

ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்காக இந்தியா வர உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கூறியுள்ளார்

சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்தியாவிற்கு ஐபிஎல் போட்டிகளை காண வர இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை இருப்பதால், ஒரு ரசிகனாக போட்டியை காண உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. வார்னர் இது குறித்து மிகவும் சோகமாக கண்ணீருடன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இந்த தடை காரணமாக ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருந்தார். இவரது தடை காரணமாக தற்போது நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்

ரசிகர்

டேவிட் வார்னர் தற்போது ஐபிஎல் போட்டிக்காக இந்தியா வரவுள்ளார். அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவோ, மைதானத்திற்குள் நுழையவோ கூடாது என்று மட்டுமே தடை உள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் சிறப்பு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து பார்க்க தடையில்லை. இதனால் அவர் போட்டியை காண வருவார்.

அதிக தனிமை

அதிக தனிமை

அவர் மிகவும் தனிமையாக உணருவதாக பேட்டி அளித்து இருக்கிறார். கிரிக்கெட் உலகம் தன்னை மிகவும் தள்ளி வைத்து இருப்பதாக அவர் மிகவும் வருத்தப்பட்டு உள்ளார். ஹைதராபாத் அணி எப்போதும் வலுவான அணி, தான் இல்லாவிட்டாலும் அந்த அணி சிறப்பாக விளையாடும் என்று அவர் பேட்டி அளித்து இருக்கிறார்.

ரொம்ப பாவம்

ரொம்ப பாவம்

சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் சமூக வலைதளத்தில் கொடுத்த லைவ் வீடியோ ஒன்றில், வார்னர் ''ஹாய் புவி'' என்று பதில் அளித்து இருந்தார். பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆஸ்திரேலியா வீரர்கள் இப்படி பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் மிகவும் தனிமையாக இருந்ததால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

Story first published: Friday, April 6, 2018, 15:39 [IST]
Other articles published on Apr 6, 2018
English summary
David Warner decides to visit India for IPL 2018. He banned by CA for ball tampering. He also banned from playing in SRH for IPL 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X