Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஞ்சி இடுப்பழகா.. செம டிக்டாக்.. தமிழ்நாட்டையும் விட்டு வைக்காத டேவிட் வார்னர் குடும்பம்!

சிட்னி : டேவிட் வார்னர் தன் குடும்பத்துடன் தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா பாடலின் பின்னணி இசைக்கு டிக்டாக் செய்துள்ளார்.

Recommended Video

இஞ்சி இடுப்பழகா.. செம டிக்டாக்.. தமிழ் பாட்டையும் விட்டு வைக்காத டேவிட் வார்னர் குடும்பம்! - வீடியோ

முன்னதாக டேவிட் வார்னர் குடும்பம் தெலுங்கு சினிமாவின் தற்போதைய பிரபலமான பாடலான "புட்ட பொம்மா" பாடலுக்கு நடனமாடி இருந்தது.

அதைத் தொடர்ந்து தமிழ் பாடலான இஞ்சி இடுப்பழகா பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளனர். இந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

டிக்டாக் சைடு பிசினஸ்

டிக்டாக் சைடு பிசினஸ்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சைடு பிசினஸாக டிக்டாக் செய்து வருகிறார். இப்படி நாம் சொல்லவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் இப்படித் தான் அவரை கலாய்த்து வருகிறார்கள். அந்த அளவுக்கு வார்னர் குடும்பம் மொத்தமும் டிக்டாக்கில் புகுந்து விளையாடி வருகிறார்கள்.

ஆசைக்காக டிக்டாக்

ஆசைக்காக டிக்டாக்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும், வீட்டை விட்டு வெளியே செல்லவும் முடியாது. இந்த நிலையில், வார்னர் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இடையே ஒருநாள் தன் சுட்டி மகள் ஆசைக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தத் துவங்கினார்.

நகைச்சுவையான வீடியோக்கள்

நகைச்சுவையான வீடியோக்கள்

தொடர்ந்து வேடிக்கையான, நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். டேவிட் வார்னர் மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வீடியோக்களில் தோன்றி வருவதால் ஒவ்வொரு வீடியோவும் பார்க்க சுவாரசியமாக உள்ளது.

புட்ட பொம்மா பாடல்

புட்ட பொம்மா பாடல்

இடை இடையே இந்திய ரசிகர்களை கவர சில வீடியோக்கள் செய்து வருகிறார். அப்படி செய்தது தான் புட்ட பொம்மா பாடலுக்கான டிக்டாக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், அந்த அணியின் உடையை அணிந்து கொண்டு ஆடி தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

5 கோடி பார்வைகள்

5 கோடி பார்வைகள்

அந்த டிக்டாக் வீடியோ இதுவரை 5 கோடி பார்வைகளை பெற்று மிரள வைத்துள்ளது. இந்த நிலையில் தான் தேவர் மகன் படத்தில் இடம்பெறும் "இஞ்சி இடுப்பழகா" என்ற பாடலின் பின்னணி இசைக்கு குடும்பத்துடன் நடனம் ஆடி உள்ளார் டேவிட் வார்னர்.

வைரல்

வைரல்

இந்த வீடியோவில் டேவிட் வார்னர்,அவரது மனைவி காண்டிஸ் மற்றும் மகளும் இடம் பெற்றுள்ளனர். நின்ற இடத்திலேயே கைகளை அசைத்து இசைக்கு ஏற்ப டிக்டாக் செய்துள்ளனர். இந்த வீடியோ டிக்டாக்கில் வைரல் ஆகி வருகிறது.

94 லட்சம் பார்வைகள்

94 லட்சம் பார்வைகள்

டேவிட் வார்னரின் இஞ்சி இடுப்பழகா டிக் டாக்கை இதுவரை 94 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. தமிழக ரசிகர்கள் பலர் வார்னரை பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர். இந்த மோசமான நேரத்தில் வார்னர் குடும்பம் நம்மை சிரிக்க வைக்கிறது என ஒருவர் கருத்து கூறி உள்ளார்.

Story first published: Saturday, May 9, 2020, 20:07 [IST]
Other articles published on May 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+