Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டெஸ்டில் இரட்டை சதம்.. முதல் ஆஸி. வீரர் என சாதனை.. சச்சினின் மகத்தான சாதனையும் சமன்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் போட்டியில் கடந்த 6 இன்னிங்சில் வார்னர் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக 48 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் வார்னரின் டெஸ்ட் போட்டிக்கான இடம் ஆபத்தாக இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை வார்னர் கடுமையாக விமர்சித்தார். இதனால் வார்னர் அணியை விட்டு நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாட்டு துறையில் மிகவும் முக்கிய நாளாக கருதப்படும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

ஆஸி அபாரம்

ஆஸி அபாரம்

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது. மார்கோ யான்சென் மற்றும் கைல் வெர்ரைன் ஜோடி நிதானமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கிரின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 45 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இம்முறை சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் டேவிட் வார்னர் களமிறங்கி விளையாடினார். இதனால், ரன்கள் வழக்கத்திற்கு மாறாக அவருடைய பேட்டிலிருந்து வேகமாக வந்தது. ஒரு கட்டத்தில் வார்னரை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.

சச்சின் சாதனை சமன்

சச்சின் சாதனை சமன்

இந்த நிலையில், 144 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் சதம் விளாசினார். இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சதம் விளாசிய 10வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன் மூலம் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 25வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். வார்னர் தொடக்க வீரராக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 45 சதம் அடித்து இருக்கிறார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

இதன் மூலம் தொடக்க வீரராக அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை டேவிட் வார்னர் சமன் செய்துள்ளார். வார்னர் அத்துடன் நிற்காமல், தொடர்ந்து அதிரடியை காட்டி இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 100வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய 3வது வீரர், முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Story first published: Tuesday, December 27, 2022, 14:09 [IST]
Other articles published on Dec 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+