Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானும் விராட் கோலியும்... ஒற்றுமைகள் குறித்து டேவிட் வார்னர் விளக்கம்

சிட்னி : தனக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்குமான ஒற்றுமைகள் குறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் மீதான வேட்கையே தன்னையும் விராட் கோலியையும் வழிநடத்துவதாகவும் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் மீதான ஆசை தன்னுடைய எதிரணியை வெற்றி கொள்ளவும் இரண்டாவதாக,எதிரணியில் உள்ள சிறப்பான வீரரை காட்டிலும் அதிக ரன்களை அடிக்க தன்னை தூண்டுவதாகவும் வார்னர் தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் விளக்கம்

டேவிட் வார்னர் விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தங்களது அணிக்காக விளையாடும்போது தங்கள் இருவரையும் கிரிக்கெட் மீதான வேட்கையே வழிநடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் மீதான வேட்கை

கிரிக்கெட் மீதான வேட்கை

தங்கள் இருவருக்குள்ளும் போட்டியின்போது ஆரோக்கியமான போட்டி நிலவும் என்றும், அவரைவிட அதிக ரன்களை தான் குவிக்க விரும்பி அதை செயல்படுத்தியும் காட்டினால், அப்போதுதான் கிரிக்கெட் மீதான தன்னுடைய வேட்கையும் அந்த போட்டியில் வெளிப்படும் என்றம் டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார்.

சிறிய சிறிய போட்டிகள்

சிறிய சிறிய போட்டிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும்போது பெரிய போரில் சிறிய சிறிய சண்டைகள் நடப்பதை போல தாங்கள் செயல்படுத்தி காட்டுவோம் என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். விராட் கோலியை விட தான் அதிக ரன்கள் குவிப்பது மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை விட புஜாரா அதிக ரன்கள் குவிப்பது போன்றவை போட்டிகளின்போது நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு விஷயங்களில் கவனம்

இரண்டு விஷயங்களில் கவனம்

இத்தகைய சிறிய சிறிய போட்டிகளே அந்த ஆட்டத்தை வழி நடத்தும் என்றும் கிரிக்கெட்டை பொறுத்தவரை தான் இரண்டு விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும் வார்னர் கூறியுள்ளார். முதலாவதாக, எதிரணியை தன்னுடைய அணி வெற்றி கொள்ள வேண்டும் என்றும் இரண்டாவதாக விராட் கோலி போன்ற எதிரணி வீரரை விட தான் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்பதும்தான் அது என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். இதே மனநிலையில்தான் போட்டிகளை விராட்கோலி எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 6, 2020, 14:58 [IST]
Other articles published on May 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+