Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாத வார்னர்.. விரட்டி விரட்டி ஆடும் மகள்கள்.. அடேங்கப்பா.. இது வேற லெவல்டா!

சிட்னி: டேவிட் வார்னரும் விடுவதாக இல்லை.. அவரது மகள்களும் விடுவதாக இல்லை.. வேற லெவல் குடும்பமாக இவர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.

டிக் டாக் நம்ம ஊரில்தான் தடை செய்திருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதை வைத்து டேவிட் வார்னர் குடும்பம் தொடர்ந்து அதகளம் செய்து வருகிறது.

ஆட்டம், பாட்டம் என விடாமல் விரட்டி விரட்டி தனது குடும்பத்தோடு என்டர்டெய்ன் செய்து கொண்டிருக்கிறார் வார்னர். அந்த வீடியோக்களும் பார்த்து ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

வார்னர் குடும்பம்

வார்னர் குடும்பம்

கொரோனா வந்தது முதல் வீட்டோடு முடங்கியிருக்கும் வார்னர் தனது குடும்பத்தோடு ஏதாவது டான்ஸ் ஆடுவது, முடி வெட்டுவது, கிரிக்கெட் ஆடுவது, பாட்டுப் பாடுவது என கலக்கிக் கொண்டிருக்கிறார். பாலிவுட் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது, நடிப்பது என அசத்திக் கொண்டுள்ளது வார்னரின் குடும்பம். இப்படித்தான் சமீப காலமாக புதுப் புது வீடியோக்களை களமிறக்கிக் கொண்டுள்ளனர்.

ஹிட் பாட்டுக்கு டான்ஸ்

ஹிட் பாட்டுக்கு டான்ஸ்

தற்போதும் கூட அக்ஷய் குமாரின் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர் வார்னரின் இரு மகள்களும். நம்ம ஊர் பாப்பாக்கள் போடுவது போல டிரஸ் போட்டுக் கொண்டு செமையாக ஆடியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் இதைப் போட்டுள்ளார் வார்னர். வழக்கம் போல பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. பாலா என்ற பாடல் இது. அதைத்தான் இரு பாப்பாக்களும் பாடியுள்ளனர்.

மகள்கள் டான்ஸ்

மகள்கள் டான்ஸ்

ஹவுஸ்புல் 4 படத்தில் இடம் பெற்ற ஹிட் பாட்டு இது. இந்தப் பாட்டுக்குத்தான் இரு சின்னக் குழந்தைகளும் டான்ஸ் ஆடியுள்ளனர். இதை பெருமையாக பகிர்ந்துள்ளார் வார்னர். மூத்த மகள்களான இன்டி ரே மற்றும் இவி மே ஆகிய இருவரும் ஆட அதை அழகாக படம் பிடித்துள்ளார் வார்னர். இதற்கு இப்போது வியூஸ் குவிந்து வருகிறது. சும்மா சொல்லக் கூடாது. அப்படியே டான்ஸில் இருவருமே அசத்தியுள்ளனர்.

அப்பாவும் மகளும் செம டான்ஸ்

அப்பாவும் மகளும் செம டான்ஸ்

இதற்கு முன்பு மகள் இன்டியுடன் இணைந்து ஷீலா கி ஜவானி என்ற இந்திப் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு கலக்கியிருந்தார் வார்னர். அது பெரும் வைரலாகிப் போனது. அதைத் தொடர்ந்து பலர் அவரைப் பாராட்டினர். பலர் டிரோல் செய்யவும் தவறவில்லை. ஆனால் வார்னர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அதைச் செய்து கொண்டுதான் வருகிறார்.

வித்தியாசமான உடற்பயிற்சி

வித்தியாசமான உடற்பயிற்சி

இதுபோக சமீபத்தில் தனது மகள்களை வைத்தே உடற்பயிற்சி செய்து வீடியோ போட்டார். அதாவது மகள்களைத் தூக்கி உடற்பயிற்சி செய்துள்ளார். மகள் மட்டுமல்லாமல் தனது மனைவியையும் தூக்கி உடற்பயிற்சி செய்துள்ளார். அதுபோக வீட்டுக்குள்ளேயே அப்பாவும் மூத்த மகளும் கிரிக்கெட் வேறு ஆடியுள்ளனர். அதை இளைய மகள் உட்கார்ந்து ரசிக்கிறார். எப்படியோ வார்னர் குடும்பத்துக்கு செம ஜாலியாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது.

Story first published: Wednesday, July 15, 2020, 20:52 [IST]
Other articles published on Jul 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+