Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் ஷர்மாவிடம் 'பீட்டர் விட்ட' வார்னருக்கு பாதி சம்பளம் 'கட்': இதெல்லாம் ஜுஜுபி என்கிறார் வார்னர்

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவை பார்த்து, இங்கிலீஷில் பேசுமாறு சண்டை போட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு போட்டி ஊதியத்தில் பாதி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெற்கெல்லாம் மசியப்போவதில்லை என்று வார்னர் கொக்கரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது. மெல்பர்னில் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.

ரெய்னாவுடன் ரோகித் அபாரம்

ரெய்னாவுடன் ரோகித் அபாரம்

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்தாலும், ரோகித் ஷர்மா மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்தார். அவருக்கு நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த, சுரேஷ் ரெய்னா நல்ல கம்பெனி கொடுத்தார்.

செல்லாது.. செல்லாது..

செல்லாது.. செல்லாது..

இந்நிலையில் 23வது ஓவரின் கடைசி பந்தில் எடுக்கப்பட்ட சிங்கிள் ரன்னால் வார்னருக்கு கோபம் பீறிட்டு வந்துவிட்டது. ஓவர்-த்ரோ மூலம் கிடைத்த அந்த ரன், செல்லாது... செல்லாது என்று கூச்சலிட்டார் வார்னர்.

சிங்கள் ரன்னுக்கு அக்கப்போரு..

சிங்கள் ரன்னுக்கு அக்கப்போரு..

ஏனெனில், ஃபீல்டர் வீசிய பந்து, ரோகித் ஷர்மாவை உரசி சென்றதாகவும், எனவே உடம்பில் பட்டு சென்ற பந்துக்காக ஒரு ரன்னை எப்படி ஒடுவது என்றும் வார்னர் கொக்கரித்தார். அப்போது பழக்கத்தின் காரணமாக, ரோகித் தனது தாய் மொழியான ஹிந்தியில் பேசியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த வார்னர், "ஆங்கிலத்தில் பேசு" என்று கத்தினார்.

சபாஷ் சரியான போட்டி..

சபாஷ் சரியான போட்டி..

அப்போது ரோகித் மற்றும் வார்னர் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆங்கிலத்திலேயே ரோகித் பதிலுக்கு நன்கு திட்டி தீர்த்தார். அதற்குள் நடுவர்கள் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.

அபராதம் போட்டாலும் ஆக்ரோஷம் நீங்காது

அபராதம் போட்டாலும் ஆக்ரோஷம் நீங்காது

இந்த சம்பவத்திற்காக வார்னருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 விழுக்காட்டை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை குழு. இதனிடையே, ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த வார்னர், "ஆக்ரோஷமாக விளையாடுவது ஆஸ்திரேலிய வீரர்களி பாணி. சில நேரங்களில் இதுபோல அபராதம் விதிக்கப்படும். அதற்கெல்லாம் அச்சப்பட்டு, ஆக்ரோஷ ஆட்டத்தை விட்டு நான் விலக மாட்டேன்" என்று மார்தட்டியுள்ளார்.

கேப்டன் அவுட்

கேப்டன் அவுட்

இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, பந்து வீச அணி வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு, ஒன்டே போட்டியில் பங்கேற்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தடை விதித்துள்ளது.

Story first published: Monday, January 19, 2015, 17:34 [IST]
Other articles published on Jan 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+