Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“யோவ் யாருயா நீ” நிலைமை புரியாமல் கோலியிடம் வார்னர் செய்த குசும்பு.. இணையத்தில் சிரிப்பலை!

சென்னை: விராட் கோலி என்ற பெயர் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் டேவிட் வார்னர் செய்த சேட்டை இணையத்தில் பரவி வருகிறது.

Recommended Video

“யோவ் யாருயா நீ” நிலைமை புரியாமல் கோலியிடம் வார்னர் செய்த குசும்பு.. இணையத்தில் சிரிப்பலை!

இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சையில் சிக்கியுள்ள விராட் கோலி கடந்த சில தினங்களாக அதிருப்தியில் இருந்து வருகிறார்.

குறிப்பாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது விராட் கோலி தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் பூதாகரமாக வெடித்துள்ளது.

 கோலியின் மோசமான நாட்கள்

கோலியின் மோசமான நாட்கள்

புதிய கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே ஈகோ சண்டை இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவருக்கு கீழ் ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் பொய் என கோலி நேற்று கூறிவிட்டார். எனினும் பிசிசிஐ மீது அதிருப்தி இருப்பதை ஒப்புக்கொண்டார்.

 பரபரப்பு சூழல்

பரபரப்பு சூழல்

விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ கூறியதாக கங்குலி விளக்கம் அளித்திருந்தார். ஆனால் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போது யாரும் வேண்டாம் என்றுக்கூறவில்லை என கோலி உண்மையை உடைத்தார். மேலும் ஒருநாள் அணியின் கேப்டன்சியை மாற்றுவது குறித்து முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை, போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதனால் விராட் கோலியை சுற்றி பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

குசும்புத்தனம்

குசும்புத்தனம்

இந்நிலையில் கோலியிடம் வேண்டுமென்றே குசும்புத்தனம் செய்துள்ளார் டேவிட் வார்னர். வார்னரின் சேட்டைகள் அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் "டிஜிட் இன்சூரன்ஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்காக விராட் கோலி நடனமாடும் வகையில் விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த டேவிட் வார்னர் உடனடியாக கமெண்டில், " என்னுடையெ நடன அசைவுகளை காப்பி அடிக்காதீங்க கோலி" எனக்குறி சிரித்தபடி எமோஜிகளை தட்டிவிட்டார்.

 பழிவாங்கும் வார்னர்?

பழிவாங்கும் வார்னர்?

இதனை கண்ட நெட்டிசன்கள், " நேரம் புரியாமல் வார்னர் விளையாடுவதாக சிரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் பாடலுக்கு டேவிட் வார்னர் மார்ஃபிங் செய்திருந்தார்" இதற்கு விராட் கோலி " நீங்கள் நலமாக தானே இருக்கிறீர்கள், அல்லது ஏதோ ஆகிவிட்டதா" என கிண்டலடித்தார். இதற்கு தற்போது வார்னர் பதிலடி கொடுக்கிறார் போல..

Story first published: Thursday, December 16, 2021, 15:49 [IST]
Other articles published on Dec 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+