For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மாயில்ல.. ஒரு வருஷம்.. ! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... சாதனை படைத்த வார்னர்

கொல்கத்தா:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், டேவிட் வார்னர் ஐபிஎல்லில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியே ரசிகர்களுக்கு செம விருந்தாக மாறி விட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின.

இந்த போட்டிக்கு ரசிகர்களிடம் இருந்து பலத்த எதிர்பார்ப்பு. காரணம்... டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்கு பிறகு ஐபிஎல்லுக்கு மீண்டு வந்திருக்கிறார். டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார்.

வார்னர் கலக்கல்

வார்னர் கலக்கல்

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்த கூட்டணி, மளமளவென ரன் குவித்தது.

சாதனை

சாதனை

போட்டியில் 85 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கவுதம் கம்பீரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் மொத்த 37 அரை சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஈர்த்த வார்னர்

ஈர்த்த வார்னர்

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், இதுவரை 36 அரைசதங்கள் அடித்திருந்தார், இவரின் இந்த சாதனையை தான் டேவிட் வார்னர் முறியடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், கடந்த ஒரு வருட தடை காலத்திற்கு பிறகு இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

ஐபிஎல் போட்டிகள் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்:

டேவிட் வார்னர் - 37

கவுதம் கம்பீர் - 36

சுரேஷ் ரெய்னா - 35

விராட் கோஹ்லி - 34

ரோகித் சர்மா - 34

Story first published: Sunday, March 24, 2019, 22:43 [IST]
Other articles published on Mar 24, 2019
English summary
David Warner goes past Gambhir, now has most fifties in Indian Premier League.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+