For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேவிட் வார்னர் vs பிராட்.. இது 15வது முறையாம்.. என்னடா இது சாம்பியன் வீரருக்கு வந்த சோதனை!

பரிமிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை 15வது முறையாக வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மிரட்டியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் வீசப்படும் ஒவ்வொரு பந்திற்கும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படிதான் டேவிட் வார்னருக்கு இங்கிலாந்து அணியின் பிராட் வீசிய ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது. காரணம், டேவிட் வார்னர் அதுவரை 14 முறை ஸ்டூவர்ட் பிராட்-டிடம் வீழ்ந்துருக்கிறார்.

David Warner got out to Stuart Broad for the 15th time in the Test Match

இதனால் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்டூவர்ட் பிராட்டிடம் வார்னர் தப்பிக்க என்ன பயிற்சி செய்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. நேற்று முதல் நாள் ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தது விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை அதிகரிப்பதற்காக தான். அதற்காக தான் டேவிட் வார்னர் களமிறங்கிய உடன் பிராட் பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஆனால் நேற்று தப்பித்த டேவிட் வார்னர், இன்று அவரிடமே வீழ்ந்துவிட்டார். இதன் மூலம் டேவிட் வார்னரை பிராட் 15வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார். வார்னர் விக்கெட் வீழ்ந்ததும் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தை எட்டியது. இதுவரை டேவிட் வார்னருக்கு 734 பந்துகளை வீசியுள்ள பிராட், மொத்தமாக 397 ரன்களை விட்டுக் கொடுத்து 15 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

அதில் இங்கிலாந்து மட்டும் 329 பந்துகள் வீசி 158 ரன்களை விட்டுக் கொடுத்து 9 முறை விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரேயொரு செஷன் நின்றிருந்தாலே மொத்த ஆட்டத்தையும் மாற்றக் கூடிய வல்லமை உள்ள வார்னர், பிராட்டுக்காகவே நேந்துவிட்ட வீரர் போல் விளையாடுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, June 17, 2023, 18:51 [IST]
Other articles published on Jun 17, 2023
English summary
The Ashes 2023: England bowler Stuart Broad dismissed David warner for the 15th time in the Ashes Tournament.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+