Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - புவனேஸ்வர் குமார் காலில் விழுந்த வார்னர்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. இவ்வளவு பாசமா?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹைதராபாத்துக்கு வந்துள்ள டேவிட் வார்னர் செய்த சம்பவம் ரசிகர்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத் அணிக்காக பல சாதனைகளை செய்து இருப்பவர் வார்னர்.

இவருடைய தலைமையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது டேவிட் வார்னர் மூன்று முறை அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு நிற தொப்பிகளை வென்று இருக்கிறார்.

David Warner heart felt tribute to bhuvaneshwar kumar during dc vs srh game

இப்படிப்பட்ட சாதனையை செய்தவர் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நீக்கியது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் வந்த வார்னருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் புவனேஸ்வர் குமாரும், இஷாந்த் சர்மாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த டேவிட் வார்னர் அங்கிருந்து ஓடி வந்து புவனேஸ்வர் குமார் காலில் விழுந்தார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத புவனேஸ்வர் குமார் அவரை தூக்கி நிறுத்தினார். இதன் பிறகு புவனேஸ்வர் குமாரை தூக்கி வாரனரை கொண்டாடினார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஐதராபாத் அணி வீரர்கள் மீது டேவிட் வார்னர் எந்த அளவுக்கு பாசமும் மரியாதையும் வைத்திருந்தால் இப்படி செய்திருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

David Warner heart felt tribute to bhuvaneshwar kumar during dc vs srh game

இதே போன்று இன்றைய ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் நான்கு ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் ஓவரில் ஒரு ரன்னும் இரண்டாவது ஓவரில் ஒரு ரன்னும் மூன்றாவது ஓவரில் மூன்று ரன்னும் நான்காவது ஓவரில் ஆறு ரன்னும் மட்டும் தான் புவனேஸ்வர் குமார் கொடுத்தார்.

இதன் காரணமாக 120 ரன்கள் அடிக்க வேண்டிய டெல்லி அணி 144 ரன்கள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது. இதைப் போன்று வார்னரும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும்.

Story first published: Monday, April 24, 2023, 23:03 [IST]
Other articles published on Apr 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+