Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நான் எதிர்பார்க்காத நினைவுகள்.. ரசிகர்களுக்கு உருக்கமான பதில்.. டேவிட் வார்னர் பிரியாவிடை பதிவு

டெல்லி : பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்தத் தொடரில் 3 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 26 ரன்களை மட்டும் தான் சேர்த்தார்.

இதில் அவருடைய சராசரி 8.6 ஆகும். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்ச சராசரி வைத்திருக்கும் வெளிநாட்டு தொடக்க வீரர் என்ற சோக சாதனையை வார்னர் பெற்றிருந்தார்.

இந்திய தொடர் மிகவும் முக்கியமானது என்பதால் அதற்காக தயாராகி வருவதாக வார்னர் கூறி இருந்தார். இந்த தொடருக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டை சதம் விளாசி இருந்தார்.

கடைசி சுற்றுப் பயணம்

கடைசி சுற்றுப் பயணம்

இன்னும் 12 மாதங்கள் விளையாடுவேன் என்றும், அணியின் வெற்றிக்காக அதில் கவனம் செலுத்த முயற்சி செய்வேன் என்றும் வார்னர் கூறியுள்ளார்.தற்போது ஆஸ்திரேலியாவில் இரண்டு வாரம் ஓய்வில் இருக்கும் வார்னர் மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் வளையாடும் வார்னர்,அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் பாரம்பரியமிக்க ஆசஸ் தொடரில் விளையாட முயற்சி செய்வார். ஆனால் அதற்கு அணியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதன் பிறகு ஐசிசி உலக கோப்பை போட்டியில் வார்னர் விளையாடுவார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இது தொடர்பான பதிவில், காயம் அடைந்தது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள வார்னர், நான் எதிர்பார்த்த நினைவுகள் இது கிடையாது என்று கூறியுள்ளார். எனினும் எங்களுடைய போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். . டெல்லி டெஸ்ட் நாங்கள் எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ள வார்னர், ஆனால் இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால், அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

12 மாதங்கள்

12 மாதங்கள்

இதனை தொடர்ந்து சிட்னி விமான நிலையத்தில் பேசிய வார்னர், தாம் 2024 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன் என்றும் ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் முடிவே இறுதியானது என்று கூறியுள்ளார். அவர்கள் தாம் அணிக்கு தேவை இல்லை என நினைத்தார்கள் என்றால் அது அப்படியே நடக்கட்டும் என்றும் வார்னர் தடாலடியாக பேசியுள்ளார். எனினும் தாம் வெள்ளை நிற கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

வார்னர் பிளான்

வார்னர் பிளான்

இன்னும் 12 தாம் மாதங்கள் விளையாடுவேன் என்றும், அணியின் வெற்றிக்காக அதில் கவனம் செலுத்த முயற்சி செய்வேன் என்றும் வார்னர் கூறியுள்ளார்.தற்போது ஆஸ்திரேலியாவில் இரண்டு வாரம் ஓய்வில் இருக்கும் வார்னர் மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் வளையாடும் வார்னர்,அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் பாரம்பரியமிக்க ஆசஸ் தொடரில் விளையாட முயற்சி செய்வார். ஆனால் அதற்கு அணியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதன் பிறகு ஐசிசி உலக கோப்பை போட்டியில் வார்னர் விளையாடுவார்.

Story first published: Saturday, February 25, 2023, 11:42 [IST]
Other articles published on Feb 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+