Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஒன்னும் கிரிமினல் கிடையாது.. எனக்கு எதிராக அநீதி நடக்கிறது.. ஆஸி. வாரியம் மீது வார்னர் புகார்

சிட்னி : நான் ஒன்றும் கிரிமினல் கிடையாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு கேப்டன் பதவியை ஏற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதைப் போன்று ஒரு ஆண்டுகள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தண்டனை விதித்திருந்தது.

மறு பரிசீலனை

மறு பரிசீலனை

இந்த நிலையில் ஸ்மித் தண்டனையை குறைத்து அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனான ஆரோன் பிஞ்ச், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து புதிய கேப்டன் யார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்தது. இதனால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மறு பரிசீலனை செய்யுமாறு டேவிட் வார்னர் கூறியிருந்தார்.

 கிரிமினல் கிடையாது

கிரிமினல் கிடையாது

டேவிட் வார்னரின் இந்த கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வார்னர், நான் ஒன்றும் கிரிமினல் கிடையாது. அனைவருக்கும் தண்டனையை எதிர்த்து கேட்க உரிமை இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தடை போன்ற தண்டனைகள் மிகவும் கடுமையானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது .

புகார்

புகார்

நான் என்னுடைய அப்பிலை கடந்த பிப்ரவரி மாதம் கேட்டிருந்தேன் . ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒன்பது மாதம் ஆகியும் இதற்கு முடிவு சொல்லாமல் இழுத்தடித்தது. ஒருவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இரண்டே நாட்களில் முடிகிறது. ஆனால் அதனை ரத்து செய்ய ஒன்பது மாதங்கள் ஆகிறது.பிஞ்ச் ஓய்வு பெற்ற பிறகாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எனது கோரிக்கையை பரிசீலனை செய்திருக்க வேண்டும்.

ஏமாற்றமாக இருக்கிறது

ஏமாற்றமாக இருக்கிறது

இது நிச்சயம் கடினமாக இருக்கிறது. நான் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் இது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் என்னை அனைவரும் புரிந்து கொண்டார்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். எனக்கு தண்டனை வழங்கப்பட்ட போது நூறு மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதனை நான் 2018 ஆம் ஆண்டு செய்து விட்டேன்.

பாதிக்கிறது

பாதிக்கிறது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இப்படி இழுத்தடிப்பது என்னை மட்டுமல்லாமல் எனது குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது. இதிலிருந்து நாங்கள் விடுபட விரும்புகிறோம். புதிய கேப்டனாக என்னை நியமித்தார்கள் என்றால் நான் நிச்சயம் அந்த பதவியை சிறப்பாக செய்வேன் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 21, 2022, 23:11 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+