Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 வயது பெண் சொன்னதை கேட்டு இப்படி பண்ணிட்டேன்.. ரசிகர்களிடம் கெஞ்சிய ஆஸி. வீரர்!

மெல்போர்ன் : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் முன் எப்போதும் இல்லாத அளவு செம பிஸியாக உள்ளனர்.

அவர்களில் டேவிட் வார்னர் ஒரு புதிய சமூக வலை தளத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ளார். ஆனால், அதில் தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

தன் ஐந்து வயது மகளின் பேச்சை கேட்டு இதை செய்ததாகவும், தனக்கு உதவுமாறும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் வார்னர்.

கிரிக்கெட் ஸ்தம்பிப்பு

கிரிக்கெட் ஸ்தம்பிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுத் துறை மோசமாக பாதிக்கப்பட்டது. அதிலும் கிரிக்கெட் விளையாட்டு மொத்தமாக ஸ்தம்பித்துப் போய் உள்ளது. எப்போதும் பயிற்சி, போட்டிகள் என சுற்றிக் கொண்டே இருந்த கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

விளையாட்டு இனி இல்லை

விளையாட்டு இனி இல்லை

கொரோனா வைரஸ் கூட்டமாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த பல நாடுகளும் தடை விதித்துள்ளன. பல விளையாட்டு அமைப்புகள் தாங்களாகவே போட்டிகளை நடத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன.

கடைசி போட்டி

கடைசி போட்டி

கடைசியாக நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டி தான். ரசிகர்கள் இல்லாத காலி அரங்கில் அந்தப் போட்டி நடைபெற்றது. அந்த தொடரும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

மொட்டை அடித்த டேவிட் வார்னர்

மொட்டை அடித்த டேவிட் வார்னர்

அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் வீட்டில் தன் குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். இடையே கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஆதரவாக மொட்டை அடித்துக் கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் தன் செல்போனில் ஒரு வீடியோவை ஓட விட்டு, அதை மற்றொரு போனில் வீடியோ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் வார்னர் மற்றும் அவரது இரு மகள்கள் சேர்ந்து டிக்டாக் செய்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் வீடியோ

இந்த நிலையில், சமீபத்தில் தன் செல்போனில் ஒரு வீடியோவை ஓட விட்டு, அதை மற்றொரு போனில் வீடியோ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் வார்னர் மற்றும் அவரது இரு மகள்கள் சேர்ந்து டிக்டாக் செய்கிறார்கள்.

டிக்டாக் செய்த வார்னர்

டிக்டாக் செய்த வார்னர்

இதுவரை டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் செய்யும் டிக்டாக் பக்கமே எட்டிப் பார்த்திருக்காத டேவிட் வார்னர் தன் 5 வயது மகள் பேச்சைக் கேட்டு டிக்டாக் வீடியோ செய்துள்ளார். அதன் பின் என்ன செய்வது எனத் தெரியாமல் ரசிகர்களிடம் உதவி கேட்டுள்ளார் வார்னர்.

உதவி தேவை

உதவி தேவை

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவின் கீழ், "என்ன நடக்கிறது என்பதை பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை. என் ஐந்து வயது மகள் டிக்டாக் செய்யுமாறு கூறினாள். எனக்கு ஃபாலோயர்ஸ் சுத்தமாக இல்லை. தயவுசெய்து எனக்கு உதவி தேவை" என கூறி உள்ளார்.

கமெண்ட்

கமெண்ட்

இதற்கிடையே வார்னர் செய்துள்ள டிக்டாக் வீடியோ சுத்தமாக நன்றாக இல்லை என சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர். பிரபலங்கள் செய்யும் டிக்டாக் வீடியோக்களுக்கு மோசமான கமெண்ட் வருவது ஒன்றும் புதிதல்ல. டேவிட் வார்னர் எத்தனை கமெண்ட் வாங்கப் போகிறாரோ?

Story first published: Thursday, April 16, 2020, 16:04 [IST]
Other articles published on Apr 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+