Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் பேட்டர் யார்?டேவிட் வார்னர் பளீச்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப வீரர் டேவிட் வார்னர்,தற்போது உலக அளவில் சிறந்த ஒருநாள் போட்டி பேட்டராக இந்தியாவின் ஷுப்மன் கில்லையும், சிறந்த டி20 பேட்டராக அபிஷேக் சர்மா விளங்குவதாக பாராட்டியுள்ளார்.மேலும், உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டராக இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை அவர் தேர்வு செய்துள்ளார்.

2022 இல் சர்வதேச அளவில் அறிமுகமானதில் இருந்து இங்கிலாந்தின் ஹாரி புரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 41 டெஸ்ட் போட்டிகளில், புரூக், 53.08 சராசரியுடன் 3,610 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 86.32 ஆகும், இது குறைந்தது 30 போட்டிகளில் விளையாடிய பேட்டர்களில் மிகச் சிறந்த சாதனையாகும்.

Shubman Gill

தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 10 சதங்கள் மற்றும் 20 அரைசதங்களை அவர் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 317 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் ஹாரி புரூக் பெற்றுள்ள வெற்றிகளை விரிவாகப் பார்த்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் அவர் விளையாடியுள்ள 37 போட்டிகளின் 64 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் மற்றும் 17 அரைசதங்களுடன் 3,214 ரன்கள் எடுத்துள்ளார்.

முகேஷ் குமார் விக்கெட் வேட்டை.. ரிஷப் பண்டுக்கு பிறந்தநாள் பரிசு.. இரானி கோப்பையை வென்ற ROI

முகேஷ் குமார் விக்கெட் வேட்டை.. ரிஷப் பண்டுக்கு பிறந்தநாள் பரிசு.. இரானி கோப்பையை வென்ற ROI

இதில் இவரது சராசரி 51.01 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 83.98 ஆகும். மேலும், 2025-27 WTC சுழற்சியில் 16 போட்டிகளில் 1,271 ரன்களும் குவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர், நடப்பு 2026 சீசனின் 6 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்கள் உட்பட 432 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

அதே சமயம், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஷுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு ஆட்டமிழக்காத இரட்டைச் சதம் விளாசினார். இந்தத் தொடரில் 3 போட்டிகளில் 333 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல், கில் 15 போட்டிகளில் விளையாடி 85.27 சராசரியுடன் 938 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டைச் சதம், 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சார்பில் 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64.01 சராசரியுடன் 3,713 ரன்கள் எடுத்துள்ளார்.

ஷுப்மன் கில்லின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அவர் விளையாடிய 70 போட்டிகளின் 69 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள், 20 அரைசதங்கள் மற்றும் 433 பவுண்டரிகள், 78 சிக்சர்களுடன் 3,713 ரன்கள் குவித்துள்ளார். இப்போட்டிகளில் இவரது சராசரி 64.01 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 103.31 ஆகும். 2026 ஆம் ஆண்டில் மட்டும் அவர் விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 895 ரன்களை 111.87 என்ற அசாத்திய சராசரியுடன் எடுத்துள்ளார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக அவர் வழிநடத்திய 15 போட்டிகளில் 85.27 சராசரி மற்றும் 116.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 938 ரன்கள் விளாசி கேப்டனாகவும் முத்திரை பதித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து இந்தியாவின் இளம் இடதுகை பேட்டரான அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,926 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 74 ரன்களே தேவை.

அபிஷேக் சர்மாவின் ஒட்டுமொத்த டி20 புள்ளிவிவரங்களை உற்றுநோக்கினால், அவர் விளையாடியுள்ள 212 போட்டிகளின் 208 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் 6,292 ரன்கள் குவித்துள்ளார்.

ரோகித் சர்மா ஓய்வு பெறும் போது, வருத்தப்படுவார்.. வயதை விட இது அதிகமாக இருக்கனும்.. கவாஸ்கர் அறிவுரை

Also Read

ரோகித் சர்மா ஓய்வு பெறும் போது, வருத்தப்படுவார்.. வயதை விட இது அதிகமாக இருக்கனும்.. கவாஸ்கர் அறிவுரை

இதில் அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 178.04 ஆகும். சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில், அவர் 62 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 13 அரைசதங்கள், 185 பவுண்டரிகள் மற்றும் 134 சிக்சர்களுடன் 1,926 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 195.13 என்ற அபாரமான அளவில் உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டில் மட்டும் 29 போட்டிகளில் 1 சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் 811 ரன்களை அவர் விளாசியுள்ளார்.

Story first published: Sunday, October 4, 2026, 16:15 [IST]
Other articles published on Oct 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+