Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களைகட்டிய கேக் சண்டை... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... உற்சாக டேவிட் வார்னர்

துபாய் : நேற்றைய ஐபிஎல் 47வது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

நேற்றைய தினம் டேவிட் வார்னரின் 34வது பிறந்ததினம் கொண்டாடப்பட்ட நிலையில் வெற்றியை தொடர்ந்து டேவிட் வார்னரின் பிறந்த தினக் கொண்டாட்டம் களைகட்டியது.

David Warner Leads Hilarious Cake Fight After Win Against DC

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல்லின் 47வது லீக் போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் டேவிட் வார்னர், விரித்திமான் சாஹா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றி கொள்ள செய்தனர்.

நேற்றைய தினம் டேவிட் வார்னரின் 34வது பிறந்ததினம் கொண்டாடப்பட்ட நிலையில், வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் பிறந்ததினக் கொண்டாட்டம் இரண்டையும் சேர்த்து கொண்டாடினார் டேவிட் வார்னர். அணி வீரர்கள் புடைசூழ கேக் வெட்டி அதை கொண்டு சண்டையும் போட்டுக கொண்டனர் சன்ரைசர்ஸ் வீரர்கள். ஒருவர்மீது கேக் பூசி, அதைக் கொண்டு அடித்து கொண்ட அவர்களது கொண்டாட்டம் காண்பவர்களையும் உற்சாகம் கொள்ள செய்தது.

பிளே-ஆப் சுற்றிற்காக தீவிரம் காட்டிவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்ததாக வரும் 31ம் தேதி ஆர்சிபியுடன் மோதவுள்ளது.

Story first published: Wednesday, October 28, 2020, 16:34 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+