Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிட் வார்னர் வாணவேடிக்கை.. பெங்களூர் அணியை வீழ்த்தியது ஹைதராபாத்

ஹைதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 92 ரன்கள் விளாசிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 2வது போட்டியில் ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவு செய்தார். தவானும், வார்னரும் தொடக்க வீரர்காளாக களமிறங்கினார்கள். தவான் 11 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மற்றொரு முனையில் நின்ற வில்லியம்ஸ்சன் நிதானமாக ஆடி ரன் குவித்தார்.

David Warner leads Hyderabad to victory

பெங்களூரின் பந்து வீச்சை பறக்கவிட்ட டேவிட் வார்னர் அதிரடியாக 50 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வில்லியஸ்சன் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வாட்சன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதிக் கட்ட ஓவர்களில் ஹென்ரிக்ஸ் 31) அதிரடி காட்ட, ஹைதராபாத் அணி 20 ஓவர் முடில் 4 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணித் தரப்பில் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஹைதராபாத்தை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருக்கு விராட் கோஹ்லியும், கே.ராகுலும் தொடக்கம் தந்தனர். மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட கோஹ்லி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுலும், டி வில்லியர்சும் அதிரடியாக ஆட பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் 51 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஹென்ரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய வாட்சன் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். இந்திய இளம் வீரரான சச்சின் பேபியும் அதிரடிக் காட்ட ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. இருப்பினும் மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். ஆனால் டி வில்லியர்ஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்ததும் பெங்களூரின் தோல்வி உறுதியானது.

20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Sunday, May 1, 2016, 2:47 [IST]
Other articles published on May 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+