Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிட் வார்னர் இனி பேட்ஸ்மேன் மட்டுமல்ல.. புதிய அவதாரம் ரெடி.. அதுவும் டி20 உலகக்கோப்பையில் தான்!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

David warner likely to take wicket keeper role for Australia team in t20 world cup 2022

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தற்போது தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என முணைப்புடன் களமிறங்குகிறது.

தொடக்கமே அதிர்ச்சி

முக்கிய வீரர் விலகல்

படு பலமாக இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலிஸ் திடீரென காயத்தால் பாதிக்கப்பட்டார். கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரராக கேமரூன் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.

திடீர் குழப்பம்

மாற்றத்தில் குழப்பம்

கேமரூன் சேர்க்கப்பட்டது தான் பெரும் குழப்பமே. ஒரு விக்கெட் கீப்பரான ஜோஸ் இங்கிலிஸுக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முழுமையான பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தற்போதைய விக்கெட் கீப்பர் மேத்யூவ் வேட் காயத்தால் பாதிக்கப்பட்டால், மாற்று விக்கெட் கீப்பர் யாரும் இல்லை.

ஃபின்ச் பதில்

கேப்டன் பதில்

இந்நிலையில் டேவிட் வார்னர் விக்கெட் கீப்பர் பணியை செய்வார் என கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டேவிட் வார்னருக்கு விக்கெட் கீப்பிங்கில் நல்ல அனுபவம் உள்ளது. அவர் அதற்காக பயிற்சி பெற்று வருகிறார். அவரால் முடியவில்லை என்றால் நான் கூட விக்கெட் கீப்பிங் செய்வேன் என ஃபிஞ்ச் கூறியிருக்கிறார்.

Story first published: Friday, October 21, 2022, 23:47 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+