Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைன்ட் பிளாக்கு.. மனைவியுடன் செம ஆட்டம் போட்ட வார்னர்.. வைரல் டிக்டாக்.. 1.5 கோடி வியூஸ்!

சிட்னி : டிக்டாக் மன்னன் டேவிட் வார்னர் மீண்டும் டிக்டாக் சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி டிக்டாக்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் டேவிட் வார்னர்.

தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளார் வார்னர்.

கிரிக்கெட் போட்டிகள்

கிரிக்கெட் போட்டிகள்

கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த இடைவெளியில் டிக்டாக் சமூக வலைதளத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

குடும்பத்துடன் டிக்டாக்

குடும்பத்துடன் டிக்டாக்

அவரது குடும்பத்துடன் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சில வேடிக்கையான வீடியோக்களுக்கு மத்தியில் இந்திய ரசிகர்களை கவர இந்திய சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடியும் வருகிறார் அவர். அந்த வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

6 கோடி பார்வைகள்

6 கோடி பார்வைகள்

முன்பு புட்டபொம்மா என்ற பிரபல தெலுங்கு பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடி சுமார் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, தமிழ் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடி இந்திய ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

மைன்ட் பிளாக் பாடல்

மைன்ட் பிளாக் பாடல்

தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சமீபத்திய திரைப்படமான "சாரிலேறு நீக்கெவரு"வில் இருந்து மைன்ட் பிளாக் என்ற பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். வார்னரின் மனைவி கேன்டிஸ் வார்னரும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார்.

50 முயற்சி

50 முயற்சி

இந்த பாடலின் நடன அசைவுகளை சரியாக ஆட தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், 50 முயற்சிகளுக்கு பின் தாங்கள் இந்த நடனத்தை ஆடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் வார்னர். மேலும், இந்த வீடியோவுக்கு 5 லட்சம் லைக் கிடைத்தால் இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம் எனவும் கூறி உள்ளார்.

எப்படி இருக்கிறது?

எப்படி இருக்கிறது?

ஆக, முதல் பாகத்தில் வார்னர் - கேன்டிஸ் நடனம் எப்படி இருக்கிறது? கேன்டிஸ் வார்னர் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி உள்ளார். வார்னர் கொஞ்சம் திக்கித் திணறி உள்ளர். கேன்டிஸ் வேகத்துக்கு அவரால் ஈடு கொடுத்து ஆட முடியவில்லை.

1.5 கோடி பார்வைகள்

1.5 கோடி பார்வைகள்

இந்த வீடியோவுக்கு 11 லட்சம் லைக்குகளை தாண்டி சென்று விட்டது. 1.5 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மூன்று குழந்தைகளும் வேறு பின்னணியில் இடம் பெற்றுள்ளனர்.

மகேஷ் பாபு ரசிகர்கள் ஆசை

மகேஷ் பாபு ரசிகர்கள் ஆசை

இதற்கு முன்னதாக மகேஷ் பாபுவின் போக்கிரி படத்தின் வசனம் ஒன்றிற்கு டப்பிங் செய்து இருந்தார் வார்னர். அப்போதே மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை மகேஷ் பாபு பாடலுக்கு நடனம் ஆடுமாறு கூறிய நிலையில், தற்போது அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

Story first published: Sunday, May 31, 2020, 16:26 [IST]
Other articles published on May 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+