என்னுடைய சொர்க்கம்... 108 நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த டேவிட் வார்னர் மகிழ்ச்சி!
சிட்னி : ஐபிஎல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்காக யூஏஇயில் குவாரன்டைன், தொடர்ந்து போட்டிகளில் விளையாடிய வார்னர், தன்னுடைய குடும்பத்தினரை 108 நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள வார்னர், மீண்டும் தன்னுடைய மகிழ்ச்சியான இடத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் இணைந்த வார்னர்
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர். இந்நிலையில் குவாரன்டைன் மற்றும் போட்டிகளில் விளையாடிவிட்டு 108 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

வீடியோக்கள் பதிவு
லாக் டவுன் காலத்திலும் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பல்வேறு போஸ்ட்களை பதிவிட்டார் டேவிட் வார்னர். அவருடைய மனைவி கேன்டிஸ் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இணைந்து பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கும் அவர் நடனம் செய்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டார்.

மகிழ்ச்சியளிக்கும் இடம்
இந்நிலையில், 108 நாட்களுக்கு பிறகு மீண்டும் தனக்கு மகிழ்ச்சியளிக்கும் இடத்திற்கு தான் வந்துவிட்டதாக வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

டேவிட் வார்னர் பங்கேற்பு
நாளை முதல் சிட்னியில் ஒருநாள் போட்டியுடன் துவங்கவுள்ள இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்களில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன.


Click it and Unblock the Notifications