Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பீரை குடிச்சுட்டு ரகசியத்தை உளறிய வார்னர்.. திருட்டு முழி முழித்த ஸ்மித்.. பகீர் சுயசரிதை!

Recommended Video

Watch Video : Australia won Ashes 2019 series

லண்டன் : இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மற்றும் துவக்க வீரர் அலஸ்டர் குக், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்து சேதம் செய்த விவகாரத்தை குடித்து விட்டு உளறியதை தன் சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இவர்கள் இருவரின் அருகே இருந்துள்ளார். அவர் வார்னர் ரகசியத்தை உளறியதை கண்டு திருட்டு முழியில் விழித்துள்ளார்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்த சம்பவம், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வார்னர் - ஸ்மித் சிக்கிக் கொள்ளும் முன்பே இங்கிலாந்தில் நடந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா பந்து சேத சம்பவம்

தென்னாப்பிரிக்கா பந்து சேத சம்பவம்

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வார்னர் அறிவுறுத்தலின் பேரில், இளம் வீரர் கேமரான் பான்கிராப்ட், உப்புத் தாள் வைத்து பந்தை சேதப்படுத்தி, ஸ்விங் செய்ய வைக்க முயற்சி செய்தனர்.

வார்னர் - ஸ்மித் தடை

வார்னர் - ஸ்மித் தடை

அப்போது பான்கிராப்ட் நேரலை ஒளிபரப்பில் சிக்கிக் கொண்டார். விசாரணையில், திட்டம் போட்ட டேவிட் வார்னர், அதை தெரிந்தும் தடுக்காத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என மூவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் டெஸ்ட் ஆட வந்தனர்

மீண்டும் டெஸ்ட் ஆட வந்தனர்

அந்த சம்பவத்துக்கு பின், தடை முடிந்து, இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் விளையாட வந்துள்ளனர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். இங்கிலாந்தை வீழ்த்தி, ஆஷஸ் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த நிலையில் வார்னர் - ஸ்மித் பற்றிய ரகசியத்தை கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அலஸ்டர் குக்.

அலஸ்டர் குக் சுயசரிதை?

அலஸ்டர் குக் சுயசரிதை?

தான் எழுதி உள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி விவரித்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறிய அலஸ்டர் குக், என்ன நடந்தது என்பது பற்றியும் கூறினார். 2017 - 18 ஆஷஸ் தொடரின் போது முதல் தர போட்டி ஒன்று நடைபெற்றது.

2 பீர் அடித்தார்

2 பீர் அடித்தார்

அந்த போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டேவிட் வார்னர் 2 பீர் குடித்துள்ளார். அதன் பின் அலஸ்டர் குக்கிடம் பேசி இருக்கிறார்.

உண்மையை உளறினார்

உண்மையை உளறினார்

போதையில் இருந்த அவர் அந்தப் போட்டியின் போது தன் கையில் சில பொருட்களை வைத்திருந்து தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் பந்தின் வேகத்தை அதிகரித்ததாகவும் கூறி இருக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் திருட்டு முழி

ஸ்டீவ் ஸ்மித் திருட்டு முழி

இதைக் கேட்ட அலஸ்டர் குக் அதிர்ச்சி அடைந்து, அருகில் நின்று இருந்த ஸ்டீவ் ஸ்மித் முகத்தை பார்த்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், வார்னரை பார்த்து "இதை நீ சொல்லி இருக்கக் கூடாது"என்பது போல திருட்டு முழியில் விழித்துள்ளார்.

குக் கேள்வி

குக் கேள்வி

இது பற்றி பேசிய அலஸ்டர் குக், ஏன் வழக்கமான வழிகளில் பந்தை சேதப்படுத்தாமல், திடீர் என உப்புத் தாள் பயன்படுத்தினீர்கள்? ஆஸ்திரேலியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள் என கூறி இருக்கிறார்.

Story first published: Wednesday, September 11, 2019, 21:14 [IST]
Other articles published on Sep 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+