Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய தொடரிலிருந்து விலகிய வார்னர்.. ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? ஆஸி. கிரிக்கெட் வாரியம் விளக்கம்

மும்பை : இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இழந்த நிலையில் தற்போது அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகி இருப்பது பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே அணியின் கேப்டன் தனது குடும்ப பிரச்சனை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி உள்ளார். எனினும் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என கருதப்பட்டது.

இந்த நிலையில் டேவிட் வார்னரும் தொடரில் இருந்து பாதியில் விலகி உள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்றால் டேவிட் வார்னர் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

வார்னர் காயம்

வார்னர் காயம்

வார்னர் கூட இந்தியா தொடர் மிகவும் முக்கியமானது என்பதால் அதற்கு தயாராகி வருவதாக பலமுறை பேட்டியில் கூறியிருந்தார். எனினும் டேவிட் வார்னர் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஃபார்ம் இழந்து காணப்பட்டார். மொத்தமாக விளையாடிய மூன்று இன்னிங்ஸில் ஒன்று ,பத்து,பதினைந்து ஆகிய ரன்கள் தான் வார்னர் அடித்து இருந்தார். இந்த நிலையில் டெல்லி டெஸ்டில் முகமது சிராஜ் வீசிய பந்து டேவிட் வார்னரின் கையை பதம் பார்த்தது.

ஆஸி.க்கு திரும்புகிறார்

ஆஸி.க்கு திரும்புகிறார்

இதனால் டெல்லி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய வார்னர் ஓய்வில் இருந்தார். அவருக்கு பதிலாக மேட் ரீன்ஸா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் வார்னர் காயம் குணமடையாததால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் மூன்று வாரம் தங்கி மீண்டும் தனது உடல் தகுதியை வார்னர் எட்ட உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .

2 மாதம்

2 மாதம்

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடர் போட்டி மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க வார்னர் திரும்புவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும் கையில் பிராக்சர் ஏற்பட்டு இருப்பதால் அது குணமடைய இரண்டு மாதத்திற்கு மேல் ஆகலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக வார்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் சந்தேகம்

ஐபிஎல் சந்தேகம்

இது ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் இல்லாமல் களம் இறங்கும் டெல்லி அணிக்கும் பெரிய இழப்பு என அவர்கள் தெரிவித்துள்ளனர். டேவிட் வார்னர் இல்லாத நிலையில் டிராவிஸ் ஹெட் தொடக்கவீரராக மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வார்னருக்கு பதில் கேமரான் கிரீன் அல்லது மிட்செல் ஸ்டார்க் பிளேயிங் லெவனில் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 21, 2023, 17:16 [IST]
Other articles published on Feb 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+