
17ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நிறைவடைந்துள்ளன. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைகொண்டுள்ள நிலையில் வரும் 17ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் பகலிரவு போட்டியுடன் துவங்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்
இந்நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து டி20 தொடரில் இடம்பெறாத அவர், தற்போது டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

நிறைவாக விளையாடினேன்
இதனிடையே தான் குறைவான காலகட்டத்திலேயே நிறைவாக விளையாடியதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள டேவிட் வார்னர், தன்னுடைய முழுமையான பிட்னசிற்காக தான் தற்போது சிட்னியில் இருப்பது சிறப்பானது என்றும் கூறியுள்ளார். தற்போது தனது காயம் சரியாகியுள்ளதாகவும் ஆயினும் டெஸ்ட் போட்டிகளுக்கு முழுமையாக தயாராக வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அணியின் பின்னடைவு
தனது மனம் மற்றும் அணி வீரர்களையும் தான் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டேவிட் வார்னர் அணியில் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டித் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











