For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்யூட் பேபி.. ஆனானப்பட்ட வார்னர் மகளே விராட் கோலி ஃபேன்தான்.. வைரலாகும் வீடியோ

Recommended Video

David Warners's daughter wants to become Kohli | விராட் கோலி ரசிகையான வார்னர் மகள்

சிட்னி: கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி சிறந்து விளங்குகின்றனர். ஆனால் டேவிட் வார்னரின் மகள், தான் விராட் கோலி போல ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார்னரின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இடதுகை ஆட்டக்காரரான வார்னர், ஐபிஎல்-லில் சர்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் விளையாடிவரும் நிலையில், அதில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

கடந்த 2018ல் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பந்து சேத முறைகேட்டில் ஒருவருடம் தடையில் இருந்த வார்னர், தற்போது மிகுந்த உத்வேகத்துடன் ஆடி வருகிறார். வார்னர் மற்றும் கோலி இருவரும் ஒரேநேரத்தில் தங்களது சாதனைகளை செய்துவந்த நிலையில், வார்னரின் இந்த ஓராண்டு தடையின்போது, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சாதனைகள்

பல்வேறு சாதனைகள்

சர்வதேச அளவில் சிறந்த ஆட்டக்காரராக விளங்கிவரும் டேவிட் வார்னர், பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். ஐபிஎல்-லிலும் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறார். கடந்த 2014 முதலே குறைந்த போட்டிகளில் அதிகளவில் ரன்களை குவித்து சாதித்து காட்டிய அவர், கடந்த ஆண்டில் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது வீறுகொண்டு விளையாடி வருகிறார்.

12 போட்டிகளில் 692 ரன்கள்

12 போட்டிகளில் 692 ரன்கள்

தடை காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வார்னர் இடம்பெறாவிட்டாலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 12 போட்டிகளில் 692 ரன்கள் குவித்து சராசரியாக 69.20 சதவிகிதத்தை பெற்றுள்ளார். மேலும் ஸ்டிரைக் ரேட்டாக 143.86 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

வார்னரின் மகள் கோலி ரசிகை

வார்னரின் மகள் கோலி ரசிகை

விராட் கோலி மற்றும் டேவிட் வார்னருக்கு இடையில் விளையாட்டில் போட்டி அதிகமாக காணப்பட்டாலும், வார்னரின் மகள் ஐவி மே, விராட்டின் தீவிர ரசிகையாக காணப்படுகிறார். தான் விராட் கோலியாக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்

நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்"

தன்னுடைய மகளுக்கு வார்னர் பந்துவீச, அதை எதிர்கொண்டு ஆடிய ஐவி, தான் கோலி என்று பெருமையுடன் சொல்கிறார். அவர் அவ்வாறு சொல்வது விராட் போல, தன்னை ஆட்டத்தில் விஞ்ச முடியாது என்று கூறும்படியாக உள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள வார்னரின் மனைவி கேன்டிஸ் வார்னர், தாங்கள் இந்தியாவில் அதிக நாட்களை செலவழிப்பதால், இந்த சிறிய பெண், விராட்டின் தீவிர ரசிகையாக விளங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, November 11, 2019, 14:20 [IST]
Other articles published on Nov 11, 2019
English summary
David Warner's daughter tells that she is Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+