தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...
சிட்னி : கொரோனா பாதிப்பை உலகெங்கிலும் ஏற்படுத்தி மக்களை முடக்கிய கொரோனா வைரஸ் பிரபலமானதோ இல்லையோ, இந்த லாக்டவுன் காலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய டிக்டாக் வீடியோக்களால் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
Recommended Video
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எந்த வுட்டையும், எந்த ஹிட் பாடலையும் அவர் விட்டு வைப்பதில்லை. தானாகவும் ஆட்டம் போடுகிறார். குடும்பத்தினரையும் அதில் இணைத்து ஆட்டம் போட வைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் கையில் எடுத்திருப்பது, தனுஷ் நடிப்பில் வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடலை. அதுவும் எப்படி இரட்டை வேடத்தில் கலக்குகிறார்.

டிக்டாக் அலப்பறைகள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து தான் போயிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் அடங்க மாட்டேன் என்று கூறுகிறார். கொரோனா வைரசால் உலகமே முடங்கினாலும் இவர் முடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். தனது டிக்டாக் வீடியோக்களால் தொடர்ந்து அலப்பறைகளை செய்து வருகிறார்.

இந்திய பிரபல பாடல்கள்
தினமும் ஒன்று அல்லது இரண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார். இந்த வீடியோக்களில் எப்போதுமே ஒரு புதுமை இருக்கும். இவரது அப்பாவித்தனமான முகபாவனைகள், அதிலும் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பிரபல பாடல்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. இவை அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விராட்டின் விருப்பம்
அக்ஷய் குமாரின் பாடலுக்கு ஆட்டம்போட்டு, டிக்டாக் வீடியோ வெளியிட்ட இவர், விராட் கோலியும் அவ்வாறு தன்னுடன் இணைந்து வீடியோ வெளியிட அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து எதிர்காலத்தில் தான் அதை செய்யவிருப்பதாக சமீபத்தில் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ் பாடல் ஒன்றிற்கு வார்னர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பயிற்சி உடையுடன் ஆட்டம்
கடந்த 2011ல் வெளியாகி பட்டையை கிளப்பிய நடிகர் தனுஷின் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு தற்போது ஆட்டம் போட்டுள்ளார் டேவிட் வார்னர். ஆனால் இந்த முறை இரட்டை வேடத்தில் இவரது ஆட்டம் காணப்படுகிறது. பயிற்சிக்கான உடையுடன் மற்றொரு வார்னரை உருவாக்குவதாக துவங்கும் அந்த வீடியோ இருவரும் இணைந்து ஆட்டம் போடுவதாக உள்ளது. இந்த வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications