கலகலத்த சூப்பர் ஓவர்.. அதிரடி வார்னர் விக்கெட்... ரொம்ப பிடிச்சிருந்துச்சு.. பெர்குசன் உற்சாகம்
துபாய் : நேற்றைய ஐபிஎல் 35வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய கேகேஆர் அணி, சூப்பர் ஓவரில் அந்த அணியை அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் ஓவரில் பௌலிங் செய்த கேகேஆர் அணியின் பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், எதிரணியின் டேவின் வார்னர் மற்றும் அப்துல் சமத் இருவரையும் 3 பந்துகளில் இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்து வீழ்த்தினார்.
இந்நிலையில், சூப்பர் ஓவரில் டேவிட் வார்னரை வீழ்த்தியது மிகவும் பிடித்திருந்ததாக பெர்குசன் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

அதிரடி சூப்பர் ஓவர்
நேற்றைய ஐபிஎல்லின் 35வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 165 ரன்களை அடித்த நிலையில், போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்ட நிலையில், கேகேஆரின் லாக்கி பெர்குசன் அதிரடியாக பௌலிங் செய்தார்.

பெர்குசன் அதிரடி
சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே டேவிட் வார்னரை பெர்குசன் போல்ட் செய்து டக் அவுட் செய்தார். இதையடுத்து இரண்டு ரன்களை கொடுத்து அடுத்த பந்திலேயே அப்துல் சமத்தையும் யார்க்கர் பந்தில் அவுட் செய்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

சிறப்பானது என பெர்குசன் மகிழ்ச்சி
இதையடுத்து கேகேஆர் அணி 3 ரன்களை எளிதாக எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முன்னதாக சேஸிங்கின் போதே 3 விக்கெட்டுகளை பெர்குசன் எடுத்திருந்தார். இந்நிலையில் சூப்பர் ஓவரில் எஸ்ஆர்எச் கேப்டன் டேவிட் வார்னரை வீழ்த்தியது மனதிற்கு நெருக்கமாகவும் சிறப்பாகவும் இருந்ததாக பெர்குசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பௌலர்களும் சிறப்பு
பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதாகவும், அவர்களின் முயற்சிக்கு சிறப்பு சேர்க்கும்வகையில் பௌலர்களும் சிறப்பாக செயல்புரிந்ததாகவும் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பெர்குசன் மற்றும் ரஸ்ஸல் இருவரின் பௌலிங் குறித்து கேப்டன் மார்கனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications